மெக்கானிக்கல் பிரிவை இதுவரை தேர்வு செய்தவர்கள் 29,599 பேர் | Kalvimalar - News

மெக்கானிக்கல் பிரிவை இதுவரை தேர்வு செய்தவர்கள் 29,599 பேர்-25-07-2013

எழுத்தின் அளவு :

சென்னை: பொதுப்பிரிவு பொறியியல் கலந்தாய்வு 33 நாட்களாக நடந்துவரும் நிலையில், 29,599 பேர், மெக்கானிக்கல் பிரிவை தேர்வு செய்துள்ளனர். இரண்டாம் இடத்தை எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் பிரிவு பெற்றுள்ளது. இப்பிரிவை 23,409 பேர் தேர்வு செய்துள்ளனர்.

சிவில் பிரிவு 16,966 மாணவர்களின் தேர்வுடன், மூன்றாமிடத்திலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு 14,554 பேருடன் நான்காமிடத்திலும், எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு 12,474 பேருடன் ஐந்தாமிடத்திலும் உள்ளன.

ஏரோநாடிகல் பிரிவை இதுவரை 1,441 பேர் தெரிவு செய்துள்ளனர். ஆட்டோமொபைல் பிரிவை 1,144 பேர் தேர்வு செய்துள்ளனர். ஐ.டி பிரிவை 6,328 பேரும், பயோடெக்னாலஜி பிரிவை 1,052 பேரும் தேர்ந்தெடுத்துள்ளனர்.

தமிழ் வழி படிப்பை பொறுத்தவரை, மெக்கானிக்கல் பிரிவை 291 பேரும், சிவில் பிரிவை 347 பேரும் தேர்வு செய்துள்ளனர். வழக்கமான பொறியியல் பாடங்கள் அல்லாத இதர புதிய பிரிவுகளை தேர்ந்தெடுத்தோரின் மொத்த எண்ணிக்கை 4,830 பேர்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us