சிறப்பு துணைத்தேர்வில் தேறியோருக்கான பொறியியல் கலந்தாய்வு | Kalvimalar - News

சிறப்பு துணைத்தேர்வில் தேறியோருக்கான பொறியியல் கலந்தாய்வு-23-07-2013

எழுத்தின் அளவு :

சென்னை: பொறியியல் பொதுக் கலந்தாய்வின் முடிவில், நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு, சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இவர்கள், தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பிளஸ் 2 Academic மற்றும் Vocational பயின்ற தகுதியானவர்கள், அண்ணா பல்கலையின் நுழைவுத்தேர்வு மற்றும் சேர்க்கை மையத்திற்கு, கீழ்காணும் ஆவணங்களுடன் நேரில் வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.

ஆவண விபரம்

* பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் (downloaded copy)
* பிளஸ் 2 தேர்வு அனுமதி கடிதம் (Hall ticket)
* 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
* மாற்றுச் சான்றிதழ்(TC)
* நிரந்தர சாதி சான்றிதழ்
* நேட்டிவிட்டி சான்றிதழ் (தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக படிக்காதவர்களோ அல்லது 8ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்புவரை ஏதாவது ஒரு வகுப்பை வெளிமாநிலத்தில் படித்தவர்கள் மற்றும் முதல் பட்டதாரிக்கான கல்விக்கடன் சலுகை பெற விண்ணப்பிப்பவர்கள்)
* முதல் பட்டதாரிக்கான சான்று மற்றும் உறுதியளிப்பு படிவம்
* புகைப்படம்

விண்ணப்பத் தொகை ரூ.500 (தமிழகத்தை சார்ந்த SC/SCA/ST பிரிவினருக்கு ரூ.250 மட்டும்)

விண்ணப்ப பதிவை, ஜுலை 27ம் தேதி, காலை 9 மணிமுதல் மாலை 5.30 மணிக்குள் முடிக்க வேண்டும்.

ஜுலை 28ம் தேதி கலந்தாய்வு நடைபெறும்.

மேலதிக தகவல்களுக்கு http://www.annauniv.edu/tnea2013/press.html.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us