சென்னை: பொறியியல் கலந்தாய்வில், அருந்ததியருக்கான உள் ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களை நிரப்ப, கூNஉஅ - 2013 க்கு விண்ணப்பித்த, தமிழகத்தைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட இன பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
ஜுலை 29ம் தேதி இந்த கலந்தாய்வு நடக்கிறது. இதில் கலந்துகொள்ள விரும்பும், பொது தாழ்த்தப்பட்ட இனப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், ஏற்கனவே தாங்கள் பெற்ற Allotment Order மற்றும் அசல் சான்றுகளுடன், அன்றைய தினம் காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள், தங்களின் வருகையைப் பதிவுசெய்த பின்னர், கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
எடுத்து வரவேண்டியவை
* முன்வைப்பு தொகைக்கான ரூ.1000
* ஒதுக்கீட்டு ஆணை (ஏற்கனவே பெற்றிருந்தால்)
* 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
* பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்
* மாற்று சான்றிதழ்
* நிரந்தர சாதிச் சான்றிதழ்
* நேட்டிவிட்டி சான்றிதழ் (தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக படிக்காதவர்களோ அல்லது 8ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்புவரை ஏதாவது ஒரு வகுப்பை வெளிமாநிலத்தில் படித்தவர்கள் மற்றும் முதல் பட்டதாரிக்கான கல்விக்கடன் சலுகை பெற விண்ணப்பிப்பவர்கள்)
* முதல் பட்டதாரிக்கான சான்றிதழ் மற்றும் உறுதியளிப்பு படிவம்.