சென்னை: கடந்த சில ஆண்டுகளின் நிலவரங்களுக்கு மாறாக, இந்தாண்டு பொறியியல் கலந்தாய்வில், அதிக மாணவர்களின் தேர்வாக மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவு திகழ்கிறது.
பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கி, 31 நாட்கள் முடிவடைந்துவிட்டன. இத்தனை நாட்களின் முடிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவைத்தான், அதிக மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். இதுவரை, மொத்தம் 27,378 பேர் இப்பிரிவை தேர்வு செய்துள்ளனர்.
இதற்கடுத்த இடத்தை, கடந்த சில ஆண்டுகளில், முதலிடம் பெற்றிருந்த எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் பிரிவு பெற்றுள்ளது. இப்பிரிவை, இதுவரை, 22,259 பேர் தேர்வு செய்துள்ளனர்.
மூன்றாமிடத்தில், சிவில் பிரிவு உள்ளது. இதை 15,431 பேர் தேர்ந்தெடுத்துள்ளனர். 4ம் இடத்தை 13,535 மாணவர்களுடன், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவும், 5ம் இடத்தை 11,588 மாணவர்களுடன், எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவும் பெற்றுள்ளது.
பாரம்பரிய பிரிவுகள் அல்லாத இதரப் பிரிவுகளை தேர்வு செய்துள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 4,706 பேர்.
மெக்கானிக்கல் தமிழ் வழி பிரிவை 245 பேரும், சிவில் தமிழ்வழி பிரிவை 307 பேரும் தேர்வு செய்துள்ளனர்.