சென்னை: அண்ணா பல்கலையில் நடந்துவரும் பொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிலிங்கில், ஒதுக்கீடு பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது.
30ம் நாளில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் 5,895 பேர். அவர்களில், வராதோர் 2,480 மற்றும் கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 13 பேர் போக, ஒதுக்கீடு பெற்றோர் 3,402 பேர். ஒருவரும் நிராகரிக்கப்படவில்லை.
ஒட்டுமொத்தமாக இதுவரை 1,47,298 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், வராதவர்களின் எண்ணிக்கை 43,325 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 386 பேர்.
இறுதியாக, ஒதுக்கீடு பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 1,03,587 பேர். ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 29.41%. இதுவரை எவரும் நிராகரிக்கப்படவில்லை.