28ம் நாளில் மட்டும் ஆப்சென்ட் எண்ணிக்கை 2,616 | Kalvimalar - News

28ம் நாளில் மட்டும் ஆப்சென்ட் எண்ணிக்கை 2,616-20-07-2013

எழுத்தின் அளவு :

சென்னை: அண்ணா பல்கலையில் நடந்துவரும் பொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிலிங்கில், 28ம் நாளான நேற்று மட்டும், ஆப்சென்ட் ஆனவர்களின் எண்ணிக்கை 2,616 என்ற அளவில் உயர்ந்து, ஆப்சென்ட் விகிதம் 40.20% என்பதாக அதிகரித்தது.

28ம் நாளில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் 6,508 பேர். அவர்களில், ஆப்சென்ட் 2,616 மற்றும் கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாத 15 பேர் போக, ஒதுக்கீடு பெற்றோர் 3,877 பேர். யாரும் நிராகரிக்கப்படவில்லை.

ஒட்டுமொத்தமாக இதுவரை 1,35,210 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், வராதவர்களின் எண்ணிக்கை 38,309 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 353 பேர்.

இறுதியாக, ஒதுக்கீடு பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 96,548 பேர். ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 28.33%. யாரும் இதுவரை நிராகரிக்கப்படவில்லை.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us