சென்னை: பொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிலிங் செயல்பாட்டின் 27ம் நாள் முடிவில், மொத்தம் 92,671 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். வராதவர்களின் எண்ணிக்கை 35,693 பேர்.
மொத்தமாக அழைக்கப்பட்டவர்கள் 1,28,702 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 338 பேர். ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 27.73%. இதுவரை யாரும் நிராகரிக்கப்படவில்லை.
27ம் நாளில் மட்டும் அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,759. அவர்களில், ஒதுக்கீடு பெற்றவர்கள் 2,883 பேர். வராதவர்கள் 1,863 பேர்.
கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 13 பேர். யாரும் நிராகரிக்கப்படவில்லை. அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் 39.15%. இத்தனை நாட்களில், இதுதான் அதிகபட்ச ஆப்சென்ட் விகிதமாகும்.