சென்னை: அண்ணா பல்கலையில் நடைபெறும் பொதுப்பிரிவு பொறியியல் கலந்தாய்வில், இதுவரை 1,23,943 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். 89,788 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். 26 நாட்கள் முடிவடைந்துள்ளன.
வராதவர்களின் மொத்த எண்ணிக்கை 33,830 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 325 பேர். யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 27.29%.
26ம் நாளில் மட்டும் 5,144 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில், 1,939 பேர் வரவில்லை. கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 17 பேர்.
யாரும் நிராகரிக்கப்படவில்லை. இறுதியாக, 3,188 பேர் ஒதுக்கீடு பெற்றனர். அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் 37.69%.