25 நாட்களில் ஒதுக்கீடு பெற்றோர் 86,600 பேர்! | Kalvimalar - News

25 நாட்களில் ஒதுக்கீடு பெற்றோர் 86,600 பேர்!-17-07-2013

எழுத்தின் அளவு :

சென்னை: பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்கி, 25 நாட்கள் முடிந்த நிலையில், ஒதுக்கீடு பெற்றோர் எண்ணிக்கை 86,600 என்ற அளவை எட்டியுள்ளது.

ஒட்டுமொத்தமாக அழைக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,799 பேர். இதுவரை வராதவர்களின் மொத்த எண்ணிக்கை 31,891. கலந்துகொண்டும், எதையும் தேர்வு செய்யாதவர்களின் எண்ணிக்கை 308. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 26.84%. இதுவரை யாரும் நிராகரிக்கப்படவில்லை.

25ம் நாளில் மட்டும் 5,087 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் வராதவர்கள் 1,888 பேர். கலந்துகொண்டும், எதையும் தேர்வு செய்யாதவர்கள் 10 பேர். யாரும் நிராகரிக்கப்படவில்லை. இறுதியாக ஒதுக்கீடு பெற்றோர் 3,189 பேர்.

அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் 37.11%. இந்த 25 நாட்களில், இதுவே உட்சபட்ச ஆப்சென்ட் விகிதமாகும். ஆப்சென்ட் விகிதம் நாளுக்குநாள் உயர்ந்துவரும் நிலையில், கவுன்சிலிங் முடிவில், கிட்டதட்ட 60 ஆயிரம் இடங்கள் வரை காலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us