ஆதிக்கம் செலுத்துகிறது எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்! | Kalvimalar - News

ஆதிக்கம் செலுத்துகிறது எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்!-03-07-2013

எழுத்தின் அளவு :

சென்னை: பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் தொடங்கி, 12 நாட்கள் முடிவடைந்த நிலையில், வழக்கம்போலவே, எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் பாடப்பிரிவின் ஆதிக்கமே தொடர்கிறது. இதுவரை, அப்பிரிவை 9,619 பேர் தேர்வு செய்துள்ளனர்.

இதற்கு அடுத்த இடத்தில், வழக்கம்போலவே, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவு ஆதிக்கம் செலுத்துகிறது. அப்பாடத்தை, இதுவரை 8,661 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். மூன்றாவது இடத்தில் கம்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங் பிரிவு வருகிறது. இதை 5,170 பேர் தேர்வு செய்துள்ளனர்.

நான்காவது இடத்தை, பாரம்பரிய பிரிவுகளில் ஒன்றான சிவில் இன்ஜினியரிங் பிடித்துள்ளது. இப்பிரிவை இந்த 12 நாட்களில் 4,647 பேர் தேர்வு செய்துள்ளனர். ஐ.டி., பிரிவை 2,702 பேர் தேர்ந்தெடுத்துள்ளனர்.

சிவில் இன்ஜினியரிங் தமிழ் வழிப் பாடப்பிரிவை 75 பேரும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் தமிழ் வழி பாடப்பிரிவை 60 பேரும் தேர்வு செய்துள்ளனர். பாரம்பரியம் அல்லாத இதரப் பிரிவுகளை தேர்வு செய்தோர் 2,864 பேர்.

பாரம்பரிய பிரிவுகளில், மிகக் குறைந்தளவாக ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பிரிவை 418 பேர் தேர்வு செய்துள்ளனர். இதற்கு சற்று கூடுதலாக ஏரோநாடிகல் பிரிவை 424 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us