எந்தப் பிரிவினருக்கு எவ்வளவு காலியிடங்கள் உள்ளன? | Kalvimalar - News

எந்தப் பிரிவினருக்கு எவ்வளவு காலியிடங்கள் உள்ளன?-25-06-2013

எழுத்தின் அளவு :

சென்னை: பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வின் 4 நாட்கள் முடிவில்(ஜுன் 24 நிலவரப்படி), மொத்தமாக 1 லட்சத்து 84 ஆயிரத்து 505 காலியிடங்கள் உள்ளன.

இவற்றில், அண்ணா பல்கலை மற்றும் பல்கலைக்கழக துறைகளில் 423 இடங்களும், உறுப்பு கல்லூரி மற்றும் மண்டல மையங்களில் 5,294 இடங்களும் உள்ளன.

இதேபோல், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 2,623 இடங்களும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 165 இடங்களும் காலியாக உள்ளன.

இவற்றில், ஒட்டுமொத்தமாக OC பிரிவினருக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 258 இடங்கள். SCA பிரிவினருக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 5,812.

BCM பிரிவினருக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 6,531 மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 615.

இவைத்தவிர, MBC பிரிவினருக்கான எண்ணிக்கை 37 ஆயிரத்து 392. மேலும், SC பிரிவினருக்கான எண்ணிக்கை 28 ஆயிரத்து 974 மற்றும் ST பிரிவினருக்கான காலியிட எண்ணிக்கை 1,923.

Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us