பொறியியல் கவுன்சிலிங் - இ.சி.இ., பிரிவே அதிகமானோரின் தேர்வு | Kalvimalar - News

பொறியியல் கவுன்சிலிங் - இ.சி.இ., பிரிவே அதிகமானோரின் தேர்வு-24-06-2013

எழுத்தின் அளவு :

சென்னை: பொறியியல் அகடமிக் பிரிவு கவுன்சிலிங் தொடங்கி 3 நாட்கள் நிறைவடைந்த நிலையில், வழக்கம்போலவே, இ.சி.இ., பிரிவையே அதிக மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். 1,612 மாணவர்கள் இப்பிரிவை தேர்வு செய்துள்ளனர்.

இரண்டாம் இடத்தை, 1,317 மாணவர்களுடன், மெக்கானிக்கல் பிரிவு பெற்றுள்ளது. மூன்றாமிடத்தை, கணிப்பொறி அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவு பெற்றுள்ளது. 884 மாணவர்கள் இப்பிரிவை தேர்வு செய்துள்ளனர். ஆட்டோமொபைல் துறையை 103 பேர் தேர்வு செய்துள்ளனர்.

சிவில் பிரிவை 608 மாணவர்களும், ஐ.டி., பிரிவை 476 பேர் தேர்வு செய்துள்ளனர். பாரம்பரிய பிரிவுகள் சாராத, இதர பொறியியல் பிரிவுகளை மொத்தமாக 824 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

சிவில் மற்றும் மெக்கானிக்கல் ஆகிய பிரிவுகளில் தமிழ் வழிக் கல்வி பிரிவுகளில், சிவில் பிரிவை 1 மாணவர் மட்டுமே தேர்வு செய்துள்ளார். மெக்கானிக்கல் பிரிவை இதுவரை யாரும் தேர்வு செய்யவில்லை.

Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us