எளிதாக வேலை வாய்ப்பை அள்ளித்தரும் ஐ.டி.ஐ. படிப்புகள் | Kalvimalar - News

எளிதாக வேலை வாய்ப்பை அள்ளித்தரும் ஐ.டி.ஐ. படிப்புகள்-16-04-2013

எழுத்தின் அளவு :

"இண்டஸ்ட்ரியல் டிரைனிங் இன்ஸ்டிடியூட்" (.டி..,) என்று அழைக்கப்படும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில், வழங்கப்படும் பல்வேறு சான்றிதழ் படிப்புகளை படித்தால், எளிதில் வேலை வாய்ப்புகள் பெறலாம்.

தமிழகத்தில் 60 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 620 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆண்டுக்கு 70 ஆயிரம் மாணவர்கள் இதில் பயில்கின்றனர். பிளஸ் 2, பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இவற்றை படிக்கலாம். ஒவ்வொரு ஆண்டும், ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சேர்க்கை நடைபெறும்.

இப்படிப்புகளை படித்தால் அரசு மற்றும் தனியார் துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. சுயதொழில், வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்புகளையும் எளிதில் பெறலாம். அரசு தொழில் பயிற்சி மையங்களில் பயில்வோருக்கு இலவச பஸ் பாஸ், கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

படிப்புகள்

* மெக்கானிக் இண்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக் மேக்ட்ரானிக்ஸ், மெக்கானிக் கம்யூட்டர் ஆப்ரேட்டர் போன்ற இரண்டாண்டு படிப்புகளுக்கு பிளஸ் 2வில் அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிஜிட்டல் போட்டோகிராபர், கம்யூட்டர் ஆப்ரேட்டர் அண்டு புரோகிராமிங் அசிஸ்டன்ட், சுருக்கெழுத்தர், டைப்ரைட்டிங் போன்ற ஓராண்டு படிப்புகளில் சேர பிளஸ் 2 வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

* பிட்டர், டர்னர், மெசினிஸ்ட், ரெப்ரிஜிரேஷன், .சி. மெக்கானிக், மெயின்டனன்ஸ் மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், மெக்கானிக், வரைவாளர், கட்டட வரைவாளர், சர்வேயர், எலக்ட்ரோ பிளான்டர், ரேடியோ அண்டு டெலிவிஷன் மெக்கானிக், எலக்ட்ரானிக் மெக்கானிக், இன்பர்மேஷன் டெக்னாலாஜி அண்டு எலக்ட்ரானிக்ஸ், சிஸ்டம் மெயின்டனன்ஸ், லிப்ட் மெக்கானிக் போன்ற இரண்டாண்டு படிப்புகளில் சேர பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

டீசல் மெக்கானிக், பம்ப் ஆபரேட்டர், பிளாஸ்டிக் புராசசிங் ஆபரேட்டர் போன்ற ஒராண்டு பயிற்சிகளும் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

* வயர் மேன், பெயின்டர், மெக்கானிக் க்ரிகல்சுரல் மெசினரி, போன்ற இரண்டாண்டு படிப்புகள், வெல்டர், சீட் மெட்டல் ஒர்க்கர், கார்பெண்டர், பிளம்பர், அச்சு வார்ப்பவர், டிராக்டர் மெக்கானிக் போன்ற ஓராண்டு படிப்புகளில் சேர, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

* நெட்ஒர்க் டெக்னிசியன், ஆடை தயாரித்தல், லித்தோ ஆப்செட் மெஷின் மைண்டர், கைவினைஞர் உணவு தயாரிப்பவர், நிறம் அகற்றுதல், சாயம் தோய்த்தல், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், எம்ப்ராய்டரி மற்றும் நீடில் ஒர்க், தோல் உற்பத்தியாளர், காலனி உற்பத்தியாளர், துணிவெட்டுதல், தையல், பூத்தைத்தல் வேலைப்பாடுவாகனம் பழுது பார்த்தல் போன்ற 6 மாத படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us