சென்னை: ஆகஸ்ட் 18ம் தேதியுடன் முடிவடைந்த பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வில் மொத்தமாக 120712 பேர் இடம் பெற்றனர்.
கடந்த ஜுலை 13ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 18 வரையில் நடந்த பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வில், 170178 பேர் அழைக்கப்பட்டதில், 120712 பேர் இடம்பெற்றனர்.
வராதோர் மொத்த எண்ணிக்கை 48988. வந்தும் எந்தப் பாடப்பிரிவையும் தேர்வு செய்யாதவர்கள் 475 பேர். 2 பேர் மட்டும் நிராகரிக்கப்பட்டனர். வராதோர் மொத்த சதவீதம் 28.79%.
இறுதிநாளான ஆகஸ்ட் 18ம் தேதி மட்டும், 5494 பேர் அழைக்கப்பட்டதில், 3205 பேர் இடம் பெற்றனர். வராதோர் எண்ணிக்கை 2259 பேர். வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 29 பேர். ஒருவர் நிராகரிக்கப்பட்டார்.
பொதுக் கலந்தாய்வின் இறுதி 2 நாட்களான ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதிகளில், வராதோர் எண்ணிக்கை விகிதம் 40%க்கு மேல் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.