சென்னை: பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங்கில், ஆகஸ்ட் 17ம் தேதி வரையான நிலவரப்படி, மொத்தம் 117507 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஜுலை 13ம் தேதி துவங்கி நடைபெற்றுவரும் பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வில், இதுவரை 164684 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 46729 பேர் வரவில்லை. வந்தும் எந்தப் பாடப்பிரிவையும் தேர்வு செய்யாதவர்கள் 446 பேர். இதன்படி, 117507 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஆகஸ்ட் 17ம் தேதி 6872 பேர் அழைக்கப்பட்ட நிலையில், 2909 பேர் வரவில்லை. 27 பேர் வந்தும் எந்தப் பாடத்தையும் தேர்வு செய்யவில்லை. இறுதியாக இடம் பெற்றவர்கள் எண்ணிக்கை 3936. பொதுப்பிரிவு கவுன்சிலிங் தொடங்கிய இத்தனை நாட்களில், இந்த ஆகஸ்ட் 17ம் தேதியில்தான் மிக அதிகமான நபர்கள் வரவில்லை. அதாவது 42.33% பேர் வரவில்லை.
முதல் நாள் கலந்தாய்வில் 42.02% பேர் வராததே மிக அதிகளவு வராதோர் விகிதமாக இருந்தது. ஆனால், ஆகஸ்ட் 17ம் தேதி நிலவரம், அந்த அளவை முறியடித்துவிட்டது.