ஒரே நாளில் 3431 பேர் கவுன்சிலிங் வரவில்லை! | Kalvimalar - News

ஒரே நாளில் 3431 பேர் கவுன்சிலிங் வரவில்லை!-17-08-2012

எழுத்தின் அளவு :

சென்னை: பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங்கில், ஒரே நாளில் மட்டும் 3431 பேர் வரவில்லை.

பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆகஸ்ட் 16ம் தேதி நடைபெற்ற கவுன்சிலிங் செயல்பாட்டிற்கு மொத்தம் 8542 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 3431 பேர் வரவில்லை.

36 பேர் வந்தும் எந்தப் பாடப்பிரிவையும் தேர்வு செய்யவில்லை. ஒருவர் நிராகரிக்கப்பட்டார். இறுதியாக 5074 பேர் தேர்வு பெற்றனர். இந்த ஒரு நாளில் மட்டும்வராதோர் சதவீதம் 40.17 என்று ஆனது.

ஆகஸ்ட் 16ம் தேதி வரையிலான நிலவரப்படி, மொத்தம் 157812 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இடம் பெற்றவர்களின் எண்ணிக்கை 113571. வராதவர்கள் 43820. வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 419 பேர். வராதோர் மொத்த சதவீதம் 27.77 என்ற அளவில் உயர்ந்துள்ளது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us