சென்னை: பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆகஸ்ட் 13 வரையான நிலவரப்படி, 37633 பேர் கவுன்சிலிங் வரவில்லை.
மொத்தமாக அழைக்கப்பட்டோர் எண்ணிக்கை 141824. அவர்களில் இடம் பெற்றவர்கள் 103820. வராதவர்களின் எண்ணிக்கை 37633 மற்றும் வந்தும் எந்தப் பாடப்பிரிவையும் தேர்வு செய்யாதவர்கள் 370.
ஆகஸ்ட் 13ம் தேதி மட்டும் அழைக்கப்பட்டவர்கள் 8122. அவர்களில் வராதவர்கள் 2932 மற்றும் வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 23. இறுதியாக இடம்பெற்றவர்களின் எண்ணிக்கை 5167.
இந்த ஒரு நாளில் மட்டும் வராதவர்களின் எண்ணிக்கை சதவிகிதம் 36.10% ஐ தொட்டது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த அளவில் வராதோர் எண்ணிக்கை சதவிகிதம் 26.54% என்ற அளவில் உள்ளது.