சென்னை: பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு செயல்பாட்டில், ஆகஸ்ட் 10 வரையான நிலவரப்படி, 91055 பேர் இடம் பெற்றுள்ளனர்.
அழைக்கப்பட்ட 122164 மாணவர்களில், மொத்தம் 30787 மாணவர்கள் வரவில்லை. வந்தும், பாடப்பிரிவு எதையும் தேர்வு செய்யாதவர்களின் எண்ணிக்கை 321. அந்தவகையில், 91055 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஆகஸ்ட் 10ம் தேதி மட்டும் அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6039. அவர்களில் வராதவர்கள் 2018. வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 15. இறுதியாக இடம் பெற்றவர்கள் 4006.
வராதவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடிக்கொண்டே செல்கிறது. கடந்த 4 நாட்களாக வராதவர்களின் எண்ணிக்கை சதவிகிதம் 30%க்கும் மேலாக உயர்ந்து கூடிக்கொண்டே செல்கிறது. ஆனாலும், பல புதிய பொறியியல் கல்லூரிகள் இந்தாண்டு திறக்கப்பட்டுள்ளதானது, கல்வியாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.