சென்னை: பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வின் 27 நாள் முடிவில் அழைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 116125. அவர்களில் இடம் பெற்றோர் 87049.
இந்த 27 நாட்களில் வராதோரின் மொத்த எண்ணிக்கை 28769 என்ற அளவில் உயர்ந்துள்ளது. அதேபோல், வந்தும் பாடப்பிரிவு எதையும் தேர்வு செய்யாதவர்கள் 306 பேர்.
27வது நாளான ஆகஸ்ட் 9ம் தேதி மட்டும் 6229 பேர் அழைக்கப்பட்டனர். ஆனால் அவர்களில் 2029 பேர் வரவில்லை. இதன் சதவீதம் 32.57% ஆகும். மேலும், கலந்துகொண்டும் எந்தப் பாடப்பிரிவையும் தேர்வு செய்யாதவர்கள் 11 பேர்.