சென்னை: பொதுப்பிரிவு பொறியியல் கன்சிலிங் துவங்கி 25 நாட்கள் முடிவுற்ற நிலையில் இடம் பெற்றோர் எண்ணிக்கை 78430 என்ற அளவில் உயர்ந்துள்ளது.
இதுவரை அழைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 103495. அவர்களில் வராதவர்களின் மொத்த எண்ணிக்கை 24784. வந்தும், எந்தப் பாடப்பிரிவையும் தேர்வு செய்யாதவர்களின் எண்ணிக்கை 280. இந்த வகையில் இடம் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 78430.
25வது நாளில்(ஆகஸ்ட் 7) மட்டும் அழைக்கப்பட்டவர்கள் 6497 பேர். அவர்களில் இடம் பெற்றவர்கள் 4529. வராதோர் எண்ணிக்கை 1956. வந்தும் எப்பாடத்தையும் தேர்வு செய்யாதோர் 12. வராதோர் எண்ணிக்கை நேற்று ஒரு நாளில் மட்டும் 30.11% என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.