பொறியியல் கலந்தாய்வில் இன்னும் ஒரு லட்சம் இடங்கள் காலி | Kalvimalar - News

பொறியியல் கலந்தாய்வில் இன்னும் ஒரு லட்சம் இடங்கள் காலி-07-06-2012

எழுத்தின் அளவு :

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பொறியியல் கலந்தாய்வில் 6ம் தேதி நிலவரப்படி, தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொறியியல் இடங்கள் காலியாக உள்ளன.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழத்தில் நடந்து வருகிறது. இக்கலந்தாய்வு ஜூலை 13ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து 26வது நாளாக இன்றும் கலந்தாய்வு நடைபெறுகின்றது.

ஆகஸ்ட் 6ம் தேதி மாலை 7.34 மணி நிலவரப்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் பிரிவு வாரியாக 1,104 இடங்களும், அரசு மற்றும் அரசு சார்ந்த கல்லூரிகளில் பிரிவு வாரியாக 10 இடங்களும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பிரிவு வாரியாக 99,590 இடங்களும், மொத்தம் 1,00,704 இடங்கள் மாணவர் சேர்க்கைக்கு நிரப்பட உள்ளது. மாணவர்கள் விரிவான தகவல்களை அறிய www.annauinv.edu என்ற இணையதளத்தை பார்க்கலாம்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us