வெளிமாநில மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் | Kalvimalar - News

வெளிமாநில மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்-06-07-2012

எழுத்தின் அளவு :

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்க விரும்பும் வெளிமாநில மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை மாணவர்கள் தெளிவாக அறிந்துகொள்வது மிகவும் அவசியம்.

தகவல்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்

Print out -ல் இருக்கும் விண்ணப்ப எண்தான் பதிவு எண்ணாகும். இந்த எண்ணை, அனைத்து இணைப்புகளிலும் தவறாமல் எழுத வேண்டும்.

இடங்கள்

பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு மொத்தம் 50 இடங்கள்(காஷ்மீரிலிருந்து குடியேறியவர்களுக்கு) ஒதுக்கப்பட்டுள்ளன.

பி.ஆர்க், படிப்பில் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேற்கூறிய அனைத்து படிப்புகளுக்கும், ஒரு மாணவர், ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

படிப்புகளின் காலஅளவு

பி.இ\பி.டெக்  - 4 வருடங்கள்(8 செமஸ்டர்கள்)

பி.ஆர்க் - 5 வருடங்கள்(10 செமஸ்டர்கள்)

தகுதிகள்

மாணவர், இந்திய குடிமகனாக, அதேசமயம் தமிழகத்தை சாராதவராக இருக்க வேண்டும். நிரந்தர இருப்பிட சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

பி.இ/பி.டெக்., படிப்பிற்கான தகுதிகள்

குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களுடன், பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் என்ற வகையில், பொதுப்பிரிவை சேர்ந்த மாணவர்கள் 50% மதிப்பெண்களும், SC/ST பிரிவு மாணவர்கள் 35% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு

சுரங்கப் பொறியியல் துறையில், ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பெண்களுக்கு அனுமதியில்லை.

மதிப்பெண் அளவீடுகள் மற்றும் தேர்வுமுறைகளைப் பற்றி அறிந்துகொள்ள http://www.annauniv.edu/otherstate2012/informationos.pdf என்ற இணையதளம் செல்க.

ஒட்டுமொத்த ரேங்க், பிராந்திய வாரியான ரேங்க், ஜாதிவாரியான ரேங்க் ஆகிய விபரங்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். விபரங்கள், செய்தித்தாள்களில் வெளியிடப்படாது. கால் லெட்டர் மூலமாகவே, கவுன்சிலிங் தேதி மற்றும் நேரம் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படும். வளாகம் மற்றும் கிளை போன்றவை, கவுன்சிலிங் மூலமாகவே தற்காலிகமாக ஒதுக்கப்படும். கிளைகள், ஒட்டுமொத்த ரேங்க் அடிப்படையில் ஒதுக்கப்படும்.

பி.ஆர்க்., படிப்பில் சேர்வதற்கான தகுதிகள்

கணிதத்தை ஒரு பாடமாக வைத்து, பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பொதுப்பிரிவு மாணவர்கள், 50% மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்றிருக்க வேண்டும். அதேசமயம், SC/ST பிரிவு மாணவர்கள், 45% மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், 10ம் வகுப்பை முடித்து, மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற 3வருட டிப்ளமோ படிப்பை எந்தப் பிரிவில் முடித்திருந்தாலும், இப்படிப்பில் சேர்வதற்கு தகுதிபெற்றவர்கள்.

பொதுப் பிரிவு மாணவர்கள், அனைத்து செமஸ்டர்களிலும் மொத்தமாக சேர்த்து, 50% குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

International Baccalaureate Diploma

இப்படிப்பில் சேர, பொதுப் பிரிவு மாணவர்கள், அனைத்து செமஸ்டர்களிலும் மொத்தமாக சேர்த்து, 50% குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

SC/ST பிரிவு மாணவர்கள், 45% மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்றிருக்க வேண்டும்.

திறனறித் தேர்வு

டெல்லியிலுள்ள Council of Architecture -ஆல் நடத்தப்படும் NATA தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச மதிப்பெண்களான 200க்கு 80 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே ஒருவர் தேர்ச்சி பெற முடியும்.

பி.ஆர்க். படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், NATA தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலுமே நடைபெறும். எனவே, NATA தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், இப்படிப்பில் சேர முடியாது.

இந்த தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல் குறித்த மேலதிக விபரங்களுக்கு, http://www.annauniv.edu/otherstate2012/informationos.pdf என்ற இணையதளம் செல்க.

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us