முதுகலை பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்க்க நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் செப்டம்பர் 5ம் தேதி 1405 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.
முதுகலை பொறியியல் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க நடைபெற்ற முதல் கட்ட கலந்தாய்வின் நிறைவில் நிரப்பப்படாமல் இருந்த காலியிடங்களை நிரப்ப செப்டம்பர் 5 மற்றும் 6ம் தேதிகளில் இரண்டாம் கட்ட கலந்தாய்வினை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவெடுத்து அறிவித்தது.
அதன்படி செப்டம்பர் 5ம் தேதி துவங்கிய இரண்டாம் கட்ட கலந்தாய்வில், மொத்தம் 5311 பேர் அழைக்கப்பட்டனர். இதில் 3497 மாணவர்கள் கலந்தாய்விற்கு வரவில்லை. 395 மாணவர்கள் படிப்பை தேர்வு செய்வதை தள்ளிவைத்துவிட்டனர். 14 மாணவர்கள் பாடப்பிரிவை தேர்வு செய்வதை தவிர்த்துவிட்டனர்.
மீதமுள்ள 1405 மாணவர்கள் அவர்கள் விரும்பிய முதுநிலை பொறியியல் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து சேர்க்கை ஆணையைப் பெற்றுக் கொண்டனர்.
இரண்டாம் கட்ட கலந்தாய்வின் இறுதி நாளான செப்டம்பர் 6ம் தேதியன்று மீதமுள்ள 1575 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 398 இடங்களும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 55 இடங்களும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 1122 இடங்களும் காலியாக உள்ளன.
None can doubt the veracity of this article.
|
by Zabrina,India 2011-09-20 12:27:52 12:27:52 IST |