செப்டம்பர் 5ல் இரண்டாம் கட்ட முதுகலை கலந்தாய்வு | Kalvimalar - News

செப்டம்பர் 5ல் இரண்டாம் கட்ட முதுகலை கலந்தாய்வு -30-08-2011

எழுத்தின் அளவு :

எம்.இ., எம்.ஆர்க்., எம்.பிளான். ஆகிய முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலையில் செப்டம்பர் மாதம் 5ம் தேதி நடைபெறுகிறது.

செப்டம்பர் 5 மற்றும் 6ஆம் தேதி மதியம் வரை முதுகலை பொறியியல் கலந்தாய்வு நடைபெறுகிறது. 6ம் தேதி மாலை 4.30 மணிக்கு எஸ்.சி.ஏ., மற்றும் எஸ்.சி. மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கலந்தாய்வுக் கடிதம் வரப்பெறாதவர்களும், அவர்களுக்குரிய கலந்தாய்வு நேரத்திற்கு ஏற்ப உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. இதில் மொத்தம் 6338 மாணவர்கள் முதுகலை பொறியியல் பாடப்பிரிவுகளில் சேர்ந்து அதற்கான ஆணையைப் பெற்றுக் கொண்டனர்.

மாணவர்கள் சேர்ந்தது போக முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர 2965 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப செப்டம்பர் மாதம் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us