சென்னை அண்ணா பல்கலையில் நடந்து முடிந்த முதுகலை பொறியியல் கலந்தாய்வில் 6338 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.
எம்.இ., எம்.ஆர்க்., எம்.பிளான்., ஆகிய முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலையில் ஆகஸ்ட் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த 6 நாள் கலந்தாய்வில், மொத்தம் 6338 மாணவர்கள் முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற்று அதற்கான ஆணையைப் பெற்றுக் கொண்டனர்.
அண்ணா பல்கலையில் 2200 மாணவர்களும், அரசு கல்லூரிகளில் 769 மாணவர்களும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 3369 மாணவர்களும் சேர்க்கை பெற்றுள்ளனர்.
மாணவர்கள் சேர்ந்தது போக ஒட்டுமொத்தமாக தற்போது 2965 இடங்கள் காலியாகவே உள்ளன. அண்ணா பல்கலையில் 706 இடங்களும், அரசு கல்லூரிகளில் 125 இடங்களும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2134 இடங்களும் காலியாக உள்ளன.