நிறைவு பெறுகிறது எம்.இ. கலந்தாய்வு-25-08-2011
எழுத்தின் அளவு :
சென்னை அண்ணா பல்கலையில் நடைபெற்று வந்த முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது.
எம்
.இ., எம்.ஆர்க்., எம்.பிளான் படிப்புகளில் சேர விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 20ம் தேதி துவங்கியது.
கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் தனித்தனியாக அனுப்பப்பட்டது
. மேலும், அழைப்புக் கடிதம் பெறப்படாதவர்கள், இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்-ஆப் மதிப்பெண்ணைப் பார்த்து அவர்களுக்கான தேதியில் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆகஸ்ட்
20ம் தேதி துவங்கி தொடர்ந்து 6 நாட்கள் நடைபெற்ற முதுகலை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு 25ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.