தமிழக உயர்கல்வித் துறைக்கு ரூ.450 கோடி இழப்பு | Kalvimalar - News

தமிழக உயர்கல்வித் துறைக்கு ரூ.450 கோடி இழப்பு-23-08-2011

எழுத்தின் அளவு :

பொறியியல் கல்லூரியில் 45 ஆயிரம் இடங்கள் காலியாக இருப்பதால் தமிழக உயர்கல்வித் துறைக்கு 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்ப்பட்டுள்ளது என்று சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கராஜ் தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் துணைவேந்தர் தங்கராஜ் செய்தியாளர்களிடம்  பேசினார். அப்போது,  தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகளில், 45 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. என்ன காரணம்? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு புதிதாக, 15 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த கல்லூரிகளில், இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், காலியிடங்கள் அதிகரித்துள்ளன. 

மேலும், மாணவர்களின் கவனம் கலை, அறிவியல் பக்கம் திரும்பியதும் ஒரு காரணம். பொறியியல் பட்டம் பெற்றவர்களில் ஒரு தேக்கம் ஏற்பட்டுள்ளதும் காரணம்.

தமிழகத்தில், 45 ஆயிரம் பொறியியல் இடங்கள் காலியாக இருப்பதால், ஒரு சீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம், உயர்கல்வித் துறைக்கு, 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது போன்று காலியிடங்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கான வழிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்" என்றார் அவர்.

காலியிடங்கள் அதிகமாக உள்ளதால், சில கல்லூரிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் குறைவாக வசூலிப்பதாக அறிவித்துள்ளனவே? என்ற கேள்விக்கு, "கல்லூரி அறக்கட்டளைக்கு, செலவு செய்யும் திறன் இருக்கலாம்" என்றார்.

சில கல்லூரிகளில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதே? என்று கேட்டதற்கு, "அதை கண்காணிக்க தனி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

பொறியியல் கவுன்சிலிங்கின் போது, குறிப்பிட்ட கல்லூரிகளுக்கு மட்டும் சீட் ஒதுக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளதே? என்ற கேள்விக்கு, "தவறான குற்றச்சாட்டு. அதற்கான வாய்ப்பே இல்லை. மாணவர்கள் தான் கல்லூரிகளை தேர்வு செய்கின்றனர்"  என்றார்.

"காஞ்சிபுரத்தில் துவக்கப்பட்ட அறிஞர் அண்ணா அரசு பொறியியல் கல்லூரிக்கு, கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதா?   என்று செய்தியாளர் கேட்டதற்கு, "சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதியில், காஞ்சிபுரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை பின்புறம், 12 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டடம் கட்ட, தமிழக அரசு, 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. வரும் 24ம் தேதி கட்டடத்திற்கு, அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு கட்டடப் பணி முடிந்து, புதிய கட்டடத்தில் கல்லூரி செயல்படத் துவங்கும்" என்று தங்கராஜ் தெரிவித்தார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us