முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு | Kalvimalar - News

முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு-19-08-2011

எழுத்தின் அளவு :

இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 20ம் தேதி முதல் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்குகிறது.

எம்.., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். ஆகிய முதுகலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களில் தகுதியானவர்களுக்கு கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அழைப்புக் கடிதம் பெறாத மாணவர்கள், தங்களது மதிப்பெண்ணிற்கு ஏற்ற நாளில் உரிய சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

கேட் தேர்வு மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து ஒரு சேர்க்கையும், இளநிலை பட்டப்படிப்பின் கட்-ஆப் வைத்து ஒரு சேர்க்கையும் நடைபெறுகிறது.

20ம் தேதி கேட் தேர்வில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வும், 21ம் தேதி கேட் தேர்வில் பங்கேற்காத மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது.

ஆகஸ்ட் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை முதுகலை பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

மாணவர்கள், அவர்களுக்குரிய கலந்தாய்வு நேரத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவே அண்ணா பல்கலை வளாகத்திற்கு வந்து விட வேண்டும். முன்பணமாக ரூ.5300 (எஸ்சி., எஸ்.சி.., எஸ்.டி. பிரிவினர் 1150) டிடி அல்லது பணமாக பல்கலை வளாகத்தில் உள்ள வங்கியில் செலுத்த வேண்டும்.

டிடியை, தி செகரட்ரி, தமிழ்நாடு காமன் அட்மிஷன்ஸ், அண்ணா பல்கலை என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் எடுக்க வேண்டும்.

முதுகலை பட்டப்படிப்பிற்கு இருக்கும் இடங்களை விட அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டிருப்பதால், http://www.annauniv.edu/tanca2011/ அண்ணா பல்கலைக்கழகத்தில் வரும் காலியிட நிலவரத்தைப் பார்த்து தெரிந்து கொண்டு கலந்தாய்விற்கு வரவும்.

மேலும் விவரங்கள் அறிய 044-22358265, 22358266, 22358267, 22358268 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கேட்கலாம்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us