பொறியியல் கலந்தாய்வு புள்ளி விவரம் | Kalvimalar - News

பொறியியல் கலந்தாய்வு புள்ளி விவரம்-19-08-2011

எழுத்தின் அளவு :

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய பொறியியல் கலந்தாய்வு நிறைவு பெற்றது.

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்விற்கு 1,40,239 பேர் விண்ணப்பித்ததில், 1,05,006 மாணவர்கள் பொறியியல் பாடப்பிரிவுகளில் சேர்க்கை பெற்றனர். பொதுப் பிரிவினருக்கான ஒதுக்கீட்டு இடங்களில் 43,393 இடங்கள் காலியாகவே உள்ளன.

தொழிற்பிரிவினருக்கான ஒதுக்கீட்டு இடங்களுக்கு 5510 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில் 3908 மாணவர்கள் சேர்க்கை பெற்றனர். 746 இடங்கள் காலியாக உள்ளன.

பொதுப்பிரிவினருக்கான துணைக் கலந்தாய்வில் 1628 பேர் விண்ணப்பித்ததில் 1176 பேர் சேர்க்கை பெற்றனர். தொழிற்பிரிவினருக்கான துணைக் கலந்தாய்வில் 187 பேர் விண்ணப்பித்ததில், 76 பேர் சேர்க்கை பெற்றனர்.

ஒட்டு மொத்தமாக பொறியியல் கலந்தாய்விற்கு 1,47,564 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 1,10,166 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். தற்போது பொறியியல் கல்லூரிகளில் 44,139 இடங்கள் காலியாகவே உள்ளன.

கடந்த ஜுன் மாதம் 30ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கு பொறியியல் கலந்தாய்வு துவங்கியது.

ஜுலை 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை தொழிற்பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. ஜுலை 8ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வும், அதனைத் தொடர்ந்து துணைக் கலந்தாய்வுகளும் நடைபெற்று முடிந்தன.

ஜுன் 30ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 18ம் தேதி வரை ஒரு நாளும் இடைவெளி இல்லாமல் பொறியியல் கலந்தாய்வு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us