பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்து சிறப்பு துணைத் தேர்வு எழுதி வெற்றி பெற்ற தொழிற்கல்வி மாணவர்களுக்கான துணைக் கலந்தாய்வு ஆகஸ்ட் 18ம் தேதி நடக்கிறது.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வு மையத்தில் ஆகஸ்ட் 18ம் தேதி மாலை 4.30 மணிக்கு இவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் அண்ணா பல்கலையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும் என்றும், 2,30 மணிக்கு பல்கலைக்கழகத்தில் இருக்க வேண்டும் எனவும். அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
மேலும், கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் முன்பணமாக ரூ.5000 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவ, மணவிகள் ரூ.1000 செலுத்த வேண்டும்.