தொழிற் பிரிவினருக்கான இறுதிகட்ட கலந்தாய்வு | Kalvimalar - News

தொழிற் பிரிவினருக்கான இறுதிகட்ட கலந்தாய்வு-16-08-2011

எழுத்தின் அளவு :

தொழிற் பிரிவு மாணவர்களுக்கான இறுதிகட்ட பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 16 மற்றும் 17ம் தேதிகளில் நடைபெறுகிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழிற்பிரிவு மாணவர்களுக்கு ஏற்கனவே முதல் கட்ட கலந்தாய்வு முடிந்துவிட்டது.

இறுதிகட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 16 மற்றும் 17ம் தேதிகளில் நடைபெறுகிறது. கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன், 2 மணி நேரத்திற்கு முன்பாக அண்ணா பல்கலை வளாகத்திற்கு வர வேண்டும்.

கலந்தாய்வில் பங்கேற்பதற்கு முன்பு ரூ.5000 முன் பணமாக செலுத்த வேண்டம். எஸ்.சி./எஸ்சிஏ/எஸ்டி பிரிவு மாணவராக இருப்பின் ரூ.1000 செலுத்த வேண்டும். கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் அண்ணா பல்கலை இணையதளத்தில் http://www.annauniv.edu/tnea2011 காலியிட நிலவரத்தைப் பார்த்துக் கொண்டு வர வேண்டும் என்று அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

தற்போது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலி இடங்கள் ஏதும் இல்லை. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் ஓசி, பிசி, எம்பிசி, எஸ்சி பிரிவுகளில் குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளன.

கலந்தாய்விற்கான கட்-ஆப் நிலவரத்தை அறிந்து கொள்ள http://kalvimalar.dinamalar.com/tamil/news-details-eng.asp?cat=2&id=27 இணைப்பைப் பார்க்கவும்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us