இன்ஜினியரிங் கல்லூரிக
கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ்காந்தி, கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைக்கும், ஐ.டி. படிப்புக்கும் வேறுபாடு கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் குறிப்பிட்ட மாணவர்களை மட்டுமே சேர்க்க அனுமதி வழங்கியது. இத்துறையில் விரும்பி சேரும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகமானதன் காரணமாகவே, கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பிலிருந்து தனியாக பிரித்து இன்பர்மேஷன் டெக்னாலஜி (ஐ.டி.,) என்ற படிப்பு துவக்கப்பட்டது. இதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசு இன்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் பிரபல தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் தவிர, தனியார் சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியரில் 85 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஐ.டி., நிறுவனங்களில் மட்டுமே வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
கல்லூரியில் சேரும் முன் தாங்கள் வரும்பும் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று அங்குள்ள மாணவ, மாணவியரிடம் கல்லூரி கொண்டுள்ள வசதிகள், வேலைவாய்ப்புக்கு எந்த வகையான நிறுவனங்கள் வருகின்றன என்பது உள்ளிட்டவை குறித்து நன்றாக கேட்டு தெரிந்து கொண்ட பின்னரே அக்கல்லூரியில் சேர வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் தொலைத் தொடர்புத்துறை வியக்கத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை மாணவ, மாணவியர் படிக்கும் காலத்தில் கல்லூரிகளில் நடக்கும் வளாக நேர்காணலில் பங்கேற்கும் போது அரியர் கொண்டிருக்காமல் இருந்தால், உடனடி வேலைவாய்ப்பு பெற முடியும்.
விடாமுயற்சி, கடின உழைப்புக்கு வெற்றி நிச்சயம். வாழ்வில் ஒருபோதும் பிறருடன் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது. அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் நடவடிக்கை காரணமாக, இந்தாண்டு இன்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை மற்றும் கல்லூரிகளில் இடங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே, அவசரப்பட்டு கல்லூரிகளில் சேர வேண்டாம். விரும்பும் கல்லூரிகளில் இடம்பெற வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறினார்.