மோதிலால் நேரு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, அலகாபாத்

எழுத்தின் அளவு :

மத்திய, மாநில அரசுகளால் 1961-ம்  ஆண்டு நிறுவப்பட்ட மோதிலால்  நேரு மண்டல பொறியியல் கல்லூரி (ரீஜினல்  இன்ஜினியரிங் காலேஜ்) தற்போது நாட்டில்  தரமான கல்வி வழங்கும்  கல்விநிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. நாட்டின்  முதல்  பிரதமரான ஜவஹர்லால்  நேரு இக்கல்லூரியை துவக்கி  வைத்தார். கங்கை ஆற்றின்  கிளையை ஒட்டி 222 ஏக்கர்  பரப்பளவில் இயற்கை எழில் சூழ இக்கல்வி நிறுவனம் அமைந்துள்ளது.

கடந்த 2002 -ம்  ஆண்டு ஜூன்  26 ஆம்  தேதி நிகர்நிலை  பல்கலைக்கழகமாக தரம்  உயர்த்தப்பட்ட இந்த கல்வி நிறுவனம்  தற்போது மோதிலால்  நேரு நேஷனல்  இன்ஸ்டிடியூட்  ஆப்  டெக்னாலஜி  என்று அழைக்கப்படுகிறது.

இந்திய மாணவர்கள்  மட்டுமின்றி இலங்கை, வங்கதேசம், நேபாளம், மொரீசியஸ், மலேசியா, ஈரான், ஏமன், ஈராக், பாலஸ்தீனம், தாய்லாந்து ஆகிய நாடுகளைச்  சேர்ந்த மாணவர்களும் இங்கு வந்து படிக்கின்றனர். மாணவர்கள் தங்குவதற்கு 7 விடுதிகளும், மாணவியர் தங்குவதற்கு 2 விடுதிகளும் உள்ளன. முதுநிலை மாணவர்களுக்கு  தனி விடுதியும் உள்ளது.


இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் (பி.டெக்.,):
பயோடெக்னாலஜி
கெமிக்கல்  இன்ஜினியரிங்
சிவில்  இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர்  சயின்ஸ்  மற்றும்  இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல்  இன்ஜினியரிங்
எலக்ட்ரானிக்ஸ்  இன்ஜினியரிங்
தகவல்  தொழில்நுட்பம்
மெக்கானிக்கல்  இன்ஜினியரிங்
புரொடக்ஷன்  மற்றும்  இன்டஸ்டிரியல்  இன்ஜினியரிங்


முதுநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் (எம்.டெக்.,):

அப்ளைடு மெக்கானிக்ஸ் துறை:
அப்ளைடு மெக்கானிக்ஸ்
புலுய்ட்ஸ்  இன்ஜினியரிங்
மெட்டீரியல்  சயின்ஸ் மற்றும்  இன்ஜினியரிங்
நீர்  வள மேலாண்மை

சிவில்  இன்ஜினியரிங் துறை:
என்விரான்மென்டல் இன்ஜினியரிங்
என்விரான்மென்டல்  ஜியோடெக்னிக்கல்  இன்ஜினியரிங்
ஜியோடெக்னிக்கல்  இன்ஜினியரிங்
ஸ்டரச்சுரல்  இன்ஜினியரிங்

கம்ப்யூட்டர்  சயின்ஸ்  மற்றும்  இன்ஜினியரிங் துறை:
கம்ப்யூட்டர்  சயின்ஸ்  மற்றும்  இன்ஜினியரிங்
இன்பர்மேஷன்  செக்யூரிட்டி
சாப்ட்வேர்  இன்ஜினியரிங்

எலக்டிரிக்கல்  இன்ஜினியரிங் துறை:
கன்ட்ரோல்  மற்றும்  இன்ஸ்ட்ருமென்டேஷன்/பவர்  சிஸ்டம்ஸ்
பவர் எலக்ட்ரானிக்ஸ்  மற்றும்  ஏ.ஐ.எஸ்.சி., டிசைன்

எலக்ட்ரானிக்ஸ்  மற்றும்  கம்யூனிகேஷன்  இன்ஜினியரிங் துறை:
டிஜிட்டல்  சிஸ்டம்ஸ்
மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ்  மற்றும்  வி.எல்.சி.ஐ., டிசைன்

ஜி.ஐ.எஸ்., செல் துறை:
ஜி.ஐ.எஸ்., மற்றும்  ரிமோட்  சென்சிங்

மெக்கானிக்கல்  இன்ஜினியரிங் துறை:
கம்ப்யூட்டர் எய்டடு டிசைன்  மற்றும்  மேனுபாக்சரிங்
டிசைன்  ஆப்  பிராசஸ்  மிஷின்ஸ்
புராடக்ட்  டிசைன்  மற்றும்  டெவலப்மென்ட்
புரொடக்சன்  இன்ஜினியரிங்

எம்.சி.ஏ., (3 ஆண்டுகள் /6 செமஸ்டர்கள்)

எம்.பி.ஏ., (2 ஆண்டுகள்/4 செமஸ்டர்கள்)
இரண்டு ஆண்டு முழுநேர படிப்பான முதுநிலை மேலாண்மை பட்டப்படிப்பில்  ஆறு முக்கிய பிரிவுகள்  உள்ளன.
நிதி
மார்க்கெடிங்
மனித வளம்
சிஸ்டம்ஸ்
புரொடக்சன்ஸ்  மற்றும்  ஆபரேசன்ஸ்
பொறியியல்  மேலாண்மை

தொடர்புகொள்ள:
மோதிலால் நேரு நேஷனல்  இன்ஸ்டிடியூட்  ஆப்  டெக்னாலஜி
அலகாபாத் 211 004

தொலைபேசி:  0532-2545341
பேக்ஸ்: 0495 2287250

இ-மெயில்: login_id@mnnit.ac.in

வெப்சைட்: www.mnnit.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us