நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சிக்கிம்

எழுத்தின் அளவு :

11வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் இந்தியாவில் 10 புதிய என்.ஐ.டி.க்களை உருவாக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்தது. அதன் அடிப்படையில் கடந்த 2009ஆம் ஆண்டில் சிக்கிமில் புதிய என்.ஐ.டி. உருவாக்கப்பட்டது.

தெற்கு சிக்கிம் பகுதியில் பர்பங்க் பிளாக், ராவங்கலா சப் டிவிஷனில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சிக்கிம் இயங்கி வருகிறது.

புதிதாகத் துவக்கப்பட்டுள்ளதால், கோழிக்கோடு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் கண்காணிப்பின் கீழ் இயங்கும்.

முதல் கல்வி ஆண்டில், எலக்ட்ரிக்கல் என்ஜினிரியங், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலி கம்யூனிகேஷன் என்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் என்ஜினியரிங் பாடப்பிரிவுகளில் தலா 30 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

ராவங்கலாவிற்குச் செல்ல அருகில் இருக்கும் ரயில் நிலையம் ஜல்பைக்குரியாகும்.

தொடர்பு கொள்ள

பேராசிரியர் ஆர். ஸ்ரீராம் குமார்
கோ-ஆர்டினேட்டர் என்.ஐ.டி. சிக்கிம்
எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் துறை
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோழிக்கோ
என்.ஐ.டி. கேம்பஸ் (பி.ஓ.)
கோழிக்கோ - 673 601, கேரளா
தொலைபேசி - 0495 2286306, 09446641001
பேக்ஸ் - 0495-2287250
மின்னஞ்சல் -  sreeram@nitc.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us