நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மணிப்பூர்

எழுத்தின் அளவு :

இந்தியாவில் புதிதாக 10 என்.ஐ.டி.க்களை உருவாக்குவது என்ற மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து மணிப்பூரில் புதிய என்.ஐ.டி. உருவாக்கப்பட்டது.

தற்காலிகமாக டக்யால்பெட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் என்.ஐ.டி. துவக்கப்பட்டது.

பாலிடெக்னிக் வளாகத்தில் கல்லூரி கட்டிடமும், விடுதிக் கட்டிடமும் புதிதாகக் கட்டப்பட்டு வகுப்புகள் நடைபெறுகின்றன. அகர்தலாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் கண்காணிப்பின் கீழ் மணிப்பூர் என்.ஐ.டி. செயல்படும்.

வட-கிழக்கு பிராந்தியத்தில் 6 என்.ஐ.டி.க்கள் உருவாக்குவது என திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் முதலில் உருவானது மணிப்பூர் என்.ஐ.டி. தான்.

முதல் கல்வி ஆண்டில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் என்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் என்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டன. பின்னர் கூடுதலாக பாடப்பிரிவுகள் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் என்.ஐ.டி.க்கான கட்டடங்கள் கட்டும் பணி நடந்து வரும் லாம்பெல்பட்டில் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் என்.ஐ.டி. தனது பணியைத் துவக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்பு கொள்ள
அரசு பாலிடெக்னிக்
டாக்யால்பெட்
இம்பால்-மேற்கு மணிப்பூர்
இந்தியா.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us