நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, புதுச்சேரி

எழுத்தின் அளவு :

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்ததன் அடிப்படையில் புதுச்சேரியில் இயங்கி வந்த புதுச்சேரி பொறியியல் கல்லூரி என்..டி.யாக தரம் உயர்த்தப்பட்டது.

காரைக்காலில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் புதுச்சேரி என்..டி. 2010ஆம் கல்வி ஆண்டு முதல் தனது பணியைத் துவக்கியுள்ளது. என்..டி.யின் நிர்வாகியாக கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பல்தேவ் ராஜை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் நியமித்துள்ளது.

தேசிய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, திருச்சியின் நிர்வாகத்தின் கீழ் இந்த புதுச்சேரி என்..டி. இயங்கும். இந்த என்..டி. புதுச்சேரி மற்றும் அந்தமான் -நிக்கோபார் மாணவர்களுக்காக துவக்கப்பட்டுள்ளது.

புதிதாக துவக்கப்பட்டுள்ள புதுச்சேரி என்..டி.யில், கம்ப்யுட்டர் சயின்ஸ் அன்ட் என்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்ஸ் என்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா 30 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

இதில் காரைக்கால் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. புதுச்சேரி என்..டி.யின் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 105 ஆக இருக்கும். இதில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் சில சிறப்பு சேர்க்கைகளின் மூலம் 15 பேர் அனுமதிக்கப்படுவார்கள்.

பூவம் மற்றும் திருவேட்டக்குடி போன்ற ஊர்களில் என்..டி.க்காக சுமார் 300 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த இடத்தில் என்..டி. இயங்கும். சி.பி.எஸ்..யால் நடத்தப்படும் ஏ..... நுழைவுத் தேர்வின் முடிவினை அடிப்படையாகக் கொண்டு சேர்க்கையை நடத்துகிறது.

2 முதல் 3 ஆண்டுகள் வரை திருச்சிராப்பள்ளி என்..டி.யின் கீழ் இந்த புதுச்சேரி என்..டி. இயங்கும். பிறகு புதுச்சேரி என்..டி.க்கென இயக்குநர் நியமிக்கப்பட்டதும் தனித்து இயங்கும்.

தொடர்பு கொள்ள

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, புதுச்சேரி

அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, காரைக்கால்.

மேலும் விவரங்களுக்கு http://www.nitt.edu/home/nitp/ இணையதளத்தைப் பார்க்கவும்.

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us