நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, அருணாச்சலப் பிரதேசம்

எழுத்தின் அளவு :

11வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் இந்தியாவில் 10 புதிய என்.ஐ.டி.க்களை உருவாக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்தது. அதன் அடிப்படையில் கடந்த 2009ஆம் ஆண்டில் அருணாச்சலப் பிரதேசத்தில் புதிய என்.ஐ.டி. உருவாக்கப்பட்டது. தற்காலிகமாக யுபியா என்ற இடத்தில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இயங்கி வருகிறது.

புதிதாகத் துவக்கப்பட்டுள்ளதால், துர்காப்பூர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் கண்காணிப்பின் கீழ் இயங்கும்.

முதல் கல்வி ஆண்டில், எலக்ட்ரிக்கல் என்ஜினிரியங், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலி கம்யூனிகேஷன் என்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் என்ஜினியரிங் பாடப்பிரிவுகளில் தலா 30 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

புதிதாகக் கட்டப்பட்ட வகுப்பறைகளும், விடுதிகளும் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் உள்ளன. மாணவ, மாணவியருக்கு தனித்தனியாக விடுதிகள் உள்ளன.

கல்லூரி வளாகத்தில் இணைய வசதியும், தொலைபேசி வசதியும் செய்யப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள :
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, அருணாச்சலப் பிரதேசம்,
போஸ்ட். யுபியா, பப்பும் பரி - 791111
அருணாச்சலப் பிரதேசம்
மின்னஞ்சல் -
தொலைபேசி - 09434788010

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us