நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஸ்ரீநகர்

எழுத்தின் அளவு :

நாட்டின் வடக்கு மாகாணங்களில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் ஸ்ரீநகரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியும் ஒன்று. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின்போது தொடங்கப்பட்ட மண்டல பொறியியல் கல்லூரி (ரீஜினல் இன்ஜினியரிங் காலேஜ்) 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் என்.ஐ.டி.,யாக தரம் உயர்த்தப்பட்டது.

உலகப்புகழ் பெற்ற தால் ஏரி மற்றும் ஹசரத்பால் புண்ணியத்தலத்திற்கும் அருகில் இந்த கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு மாணவர் தங்குவதற்கு 4 விடுதிகளும், மாணவியர் தங்குவதற்கு ஒரு விடுதியும் உள்ளது. இவற்றில் ஆயிரத்து 152 மாணவர்களும், 100 மாணவிகளும் தங்க முடியும். பி.டெக்., படிப்புகள் மட்டுமல்லாமல், பல்வேறு பிரிவுகளில் எம்.டெக்., மற்றும் ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலேயே முக்கிய தொழில்நுட்ப நூலகத்தில் ஒன்றாக இக்கல்வி நிறுவன நூலகம் விளங்குகிறது. இங்கு இன்ஜினியரிங் சயின்ஸ் மற்றும் ஹூமானிட்டிஸ் சம்பந்தப்பட்ட 60 ஆயிரம் புத்தகங்களும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வெளியாகும் 6 ஆயிரம் இதழ்களும் உள்ளன.

பட்டப்படிப்பு துறைகள்:
கெமிக்கல் இன்ஜினியரிங்
வேதியியல்
கணிதம்
சிவில் இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங்
மெட்டலர்ஜிக்கல் இன்ஜினியரிங்
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
வேதியியல்
ஹூமானிட்டிஸ்

தொடர்புகொள்ள:
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
ஹசரத்பால், ஸ்ரீநகர் 190 006
காஷ்மீர்

தொலைபேசி: 0194 2424792 / 4797 / 9423
இ-மெயில்: webadmin@nitsri.net

வெப்சைட்: www.nitsri.net

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us