விஸ்வேஸ்வரய்யா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, நாக்பூர்

எழுத்தின் அளவு :

இந்தியாவில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக முதன் முதலில் துவக்கப்பட்ட 8 என்.ஐ.டி., களுள், நாக்பூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியும் ஒன்று. தற்போது இந்தியாவில் 20 என்.ஐ.டி., கள் உள்ளன. 1960ம் ஆண்டு இந்நிறுவனம் துவக்கப்பட்டது. 1962ல், இன்ஜினியர் மற்றும் அறிவியல் அறிஞராக சிறந்து விளங்கிய விஷ்வேஸ்வரய்யாவின் பெயர், இக்கல்வி நிறுவனத்துக்கு சூட்டப்பட்டது. 2002ல் இக்கல்வி நிறுவனத்துக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது. 214 ஏக்கரில் அமைந்துள்ளது.

கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு பாடப்படிப்போடு, தொழில்துறை அனுபவங்களும் கற்றுத்தரப்படுகின்றன. இன்டர்நெட் வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் லேப், நூலகம், தங்கும் விடுதி, கேன்டீன், வங்கி கிளை, மருந்தகம், விளையாட்டு மைதானம் போன்ற வசதிகள் உள்ளன.

பாடப்பிரிவுகள்
பி.டெக்., படிப்புகள் (4 ஆண்டு)
பி.டெக்., (சிவில் இன்ஜினியரிங்)
பி.டெக்., (கெமிக்கல் இன்ஜினியரிங்)
பி.டெக்., (கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்)
பி.டெக்., (எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்)
பி.டெக்., (எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்)
பி.டெக்., (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்)
பி.டெக்., (மெட்டீரியல் இன்ஜினியரிங்)
பி.டெக்., (மைனிங் இன்ஜினியரிங்)
பி.டெக்., (ஆர்கிடெக்சர்)  ஐந்து ஆண்டு

தேர்வு முறை: பிளஸ் 2 வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய அளவில் நடைபெறும் ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எம்.டெக்., படிப்புகள் (2 ஆண்டு)
எம்.டெக்., (என்விரான்மென்டல் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (வி.எல்.எஸ்.ஐ., டிசைன்)
எம்.டெக்., (கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (அப்ளைடு மெக்கானிக்ஸ்)
எம்.டெக்., (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (ஹீட் பவர் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (மெட்டீரியல் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (அர்பன் பிளானிங்)

தேர்வு முறை: பி.டெக்., படிப்பில் எதாவது ஒரு பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கேட் நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பி.எச்டி., படிப்புகள்
இக்கல்வி நிறுவனத்தில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளிலும் பி.எச்டி., படிப்பு உள்ளது. பி.டெக்., மற்றும் எம்.டெக்., படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். கல்லூரி நடத்தும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

வேலைவாய்ப்பு
மாணவர்கள் நேர்முகத்தேர்வில் பங்கேற்கும் விதமாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. குழு விவாதம், ரீசனிங், ஆங்கில திறன் போன்ற பயிற்சிகள் அனுபவமிக்க ஆசிரியர்களால் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் இக்கல்வி நிறுவனத்தில் வளாகத்தேர்வு நடைபெறுகிறது. இதில் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் பல கலந்து கொண்டு மாணவர்களை தேர்வு செய்கின்றன. 2008ல் 249 மாணவர்களும், 2009ல் 278 மாணவர்களும், 2010ல் 308 மாணவர்களும் வளாகத்தேர்வுகளில் தேர்வாகி வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

மேலும் விபரங்களுக்கு www.vnit.ac.in என்ற கல்வி நிறுவனத்தின் வெப்சைட்டை பார்க்கவும்.

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us