நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, குருஷேத்ரா

எழுத்தின் அளவு :

பஞ்சாப் பொறியியல் கல்லூரி, தாப்பர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி ஆகிய கல்லூரிகளில் தலா 60 மாணவர் சேர்க்கையுடன் 1963ல் இந்த கல்வி  நிறுவனம் துவக்கப்பட்டது.
பிறகு பி.எஸ்.சி., பொறியியல் முதலாம் ஆண்டில் 120 மாணவர்கள் சேர்க்கையுடன் 1965ம் ஆண்டுமுதல் ஹரியானாவில் உள்ள குருசேத்ரா வளாகத்திற்கு மாற்றப்பட்டது. அடுத்த ஆண்டே மாணவர் சேர்க்கை 250 ஆக உயர்த்தப்பட்டது. இவ்வாறு வளர்ச்சிப்படிகளைக் கண்ட இந்த கல்வி நிறுவனம் 2002ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியாக தரம் உயர்த்தப்பட்டது.

தொடர்ந்து, 2006-07 ஆம் ஆண்டில் எம்.பி.ஏ., படிப்பும், இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் இன்டஸ்டிரியல் இன்ஜினியரிங் மேனேஜ்மென்ட் ஆகிய பிரிவுகளில் நான்கு ஆண்டு பி.டெக்., பட்டப்படிப்புகளும், 2007ல் எம்.சி.ஏ., படிப்பும் அறிமுகப்படுத்தப்பட்டது. காலத்தின் தேவைக்கேற்ப பாடத்திட்டங்கள் நவீன படுத்தப்படுகின்றன.

இளநிலை பட்டப்படிப்புகள் (பி.டெக்.,):
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்
இன்பர்மேஷன் டெக்னாலஜி
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
இன்டஸ்டிரியல் இன்ஜினியரிங் மற்றும் மேனேஜ்மென்ட்
எலக்டிரிக்க்கல் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங்

முதுநிலை பட்டப்படிப்புகள் (எம்.டெக்.,):
ரெகுலர் மாணவர்களுக்கு 4 செமஸ்டர் பாடத்திட்டத்திலும், முதுநிலை டிப்ளமோ மாணவர்களுக்கு 2 செமஸ்டர் பாடத்திட்டத்திலும் எம்.டெக்., படிப்பு வழங்கப்படுகிறது.

இயற்பியல்
இன்ஸ்ட்ருமென்டேஷன்
நானோ டெக்னாலஜி

சிவில் இன்ஜினியரிங் துறை:
சாயில் மெக்கானிக்ஸ் மற்றும் பவுண்டேஷன் இன்ஜினியரிங்
ஸ்டரக்ச்சுரல் இன்ஜினியரிங்
டிரான்ஸ்போர்ட்டேஷன் இன்ஜினியரிங்
வாட்டர் ரிசோர்சஸ் இன்ஜினியரிங்
என்விரான்மென்டல் இன்ஜினியரிங்

எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறை:
கன்ட்ரோல் சிஸ்டம்
பவர் சிஸ்டம்
பவர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டிரைவ்ஸ்
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை:
கேட்/கேம்
ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன்

எம்.பி.ஏ.,

தொடர்புகொள்ள:
ராயா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
குருஷேத்ரா 136 119
ஹரியானா

வெப்சைட்: ww.nitkkr.ac.in

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us