நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஜாம்ஷெட்பூர்

எழுத்தின் அளவு :

இந்தியாவில் உள்ள என்.ஐ.டி.,களுள், ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியும் ஒன்று. இக்கல்வி நிறுவனம் 1960ம் ஆண்டு துவக்கப்பட்டது. மத்திய மனிதவள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இக்கல்வி நிறுவனம், 2002ம் ஆண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அந்தஸ்து பெற்றது.

இன்ஜினியரிங் மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. பாடப் படிப்போடு தொழில்துறை அனுபவமும் கற்றுத்தரப்படுகிறது. 100 அறி
வியல் ஆய்வகங்கள், நூலகம், 11 தங்கும் விடுதிகள், போஸ்ட் ஆபிஸ், வங்கி, மருந்தகம், கம்ப்யூட்டர் லேப், கல்லூரி பஸ், கேன்டீன் போன்ற
வசதிகள் உள்ளன.

விடுதி மற்றும் கல்விநிறுவனத்தில் உள்ள அனைத்து பிரிவு துறைகளுக்கும் இன்டர்நெட் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இக்கல்வி நிறுவனத்தில் படிப்போடு விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக் கப்படுகிறது. கைப்பந்து, கூடைப் பந்து, டென்னிஸ், பேட்மின்டன் போன்ற மைதானங்கள் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இளநிலை படிப்புகள் 4 வருடம்
பி.டெக்., (சிவில் இன்ஜினியரிங்)
பி.டெக்., (கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்)
பி.டெக்., (எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்)
பி.டெக்., (எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்)
பி.டெக்., (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்)
பி.டெக்., (மெட்டீரியல் சயின்ஸ்)
பி.டெக்., (புரடெக்ஷன் இன்ஜினியரிங் அண்ட் மேனேஜ்மென்ட்)

தேர்வு முறை:
பிளஸ் 2 படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய அளவில் நடைபெறும் ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் ஜார்க்கண்ட் மாநில மாணவர்களுக்கும், மீதமுள்ள 50 சதவீத இடங்கள் இதர மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப் பட்டுள்ளது.

முதுகலை படிப்புகள்  2 வருடம்
எம்.டெக்., (மெட்டீரியல் டெக்னாலஜி)
எம்.டெக்., (பவுண்ட்ரி டெக்னாலஜி)
எம்.டெக்., (பவர் சிஸ்டம்)
எம்.டெக்., (கம்ப்யூட்டர் இன்டக்ரேட்டடு டிசைன்)
எம்.டெக்., (சர்பேஸ் இன்ஜினியரிங்)
எம்.சி.ஏ.,  மூன்று வருடம்

தேர்வு முறை:
பி.டெக்., படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள்
பெற்றிருக்க வேண்டும். கேட் நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். பிஎச்.டி., படிப்புகள்
இக்கல்வி நிறுவனத்தில் உள்ள அனைத்து இன்ஜினியரிங் பிரிவுகளிலும், பிஎச்.டி., படிப்புவசதிகள் உள்ளன. இப்படிப்புகளில் சேருவதற்கு எம்.டெக்., படிப்புகளில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

வேலைவாய்ப்புகள்:
மாணவர்களுக்கு வளாகத்தேர்வில் கலந்து கொள்வது பற்றி, அனுபவ ஆசிரியர்களைக் கொண்டு சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் முன்னணி நிறுவனங்கள் பல இக்கல்வி நிறுவனத்தின் வளாகத்தேர்வில் கலந்து கொண்டு தகுதியான மாணவர்களை தேர்வு செய்கின்றன. இதனால் படிக்கும் போதே மாணவர்கள் வேலைவாய்ப்பையும் பெறுகின்றனர். மேலும் விபரங்களுக்கு www.nitjsr.ac.in என்ற
இக்கல்வி நிறுவனத்தின் வெப்சைட்டை பார்க்கவும்.

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us