டாக்டர் அம்பேத்கர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஜலந்தர்

எழுத்தின் அளவு :

இந்தியாவில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் என்.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் மத்திய அரசால் துவக்கப்பட்டன. தற்போது நாட்டில் 20 என்.ஐ.டி., கல்லூரிகள் உள்ளன. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள பி.ஆர்., அம்பேத்கர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, 1987ம் ஆண்டு துவக்கப்பட்டது. இக்கல்வி நிறுவனத்துக்கு 2002ம் ஆண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது.

அனுபவமிக்க ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் சிறப்பான கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இக்கல்வி நிறுவனம் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப துறையில் பாடப்படிப்போடு, நவீன தொழில்துறை பயிற்சியையும் இணைந்து வழங்குகிறது. சிறந்த கட்டடங்கள், இன்டர்நெட் வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் ஆய்வகம், டிஜிட்டல் நூலகம், போஸ்ட் ஆபிஸ், ஷாப்பிங், கேன்டீன், வங்கி, தங்கும் விடுதிகள், மருந்தகம், செமினார் ஹால் போன்ற வசதிகள் உள்ளன.

இளநிலை படிப்புகள்  நான்கு வருடம்
பி.டெக்., (பயோ டெக்னாலஜி)
பி.டெக்., (கெமிக்கல் இன்ஜினியரிங்)
பி.டெக்., (சிவில் இன்ஜினியரிங்)
பி.டெக்., (கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்)
பி.டெக்., (எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்)
பி.டெக்., (இன்டஸ்ட்ரியல் மற்றும் புரடக்சன் இன்ஜினியரிங்) 
பி.டெக்., (இன்ஸ்ட்ரூமென்டேசன் மற்றும் கன்ட்ரோல் இன்ஜினியரிங்)
பி.டெக்., (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்)
பி.டெக்., (டெக்ஸ்டைல் இன்ஜினியரிங்)

தேர்வு முறை: பிளஸ் 2 படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தேசிய அளவில் நடைபெறும் ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முதுகலை படிப்புகள்  இரண்டு வருடம்
எம்.டெக்., (கெமிக்கல் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி)
எம்.டெக்., (ஸ்ட்ரக்சரல் மற்றும் கன்ஸ்ட்ரக்சன் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் அன்ட் மேனேஜ்மென்ட்)

தேர்வு முறை: பி.டெக்., பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய அளவில் நடைபெறும் கேட் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பகுதி நேர முதுகலை படிப்புகள்  மூன்றரை வருடம்
எம்.டெக்., (கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி)
எம்.டெக்., (ஸ்ட்ரக்சரல் மற்றும் கன்ஸ்ட்ரக்சன் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் அன்ட் மேனேஜ்மென்ட்)

தேர்வு முறை: பி.டெக்., பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவரவர் துறையில் 2 வருட முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இரண்டு வருடம்
எம்.எஸ்சி., (வேதியியல்)
எம்.எஸ்சி., (இயற்பியல்)
எம்.எஸ்சி., (கணிதம்)

தேர்வு முறை: பி.எஸ்சி., பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்டி., படிப்புகள் முழு நேரம் மற்றும் பகுதி நேரம் என இரு பிரிவுகளிலும் பல்வேறு பாடப்பிரிவுகளில் பி.எச்டி., படிப்புகள் உள்ளன.

வேலைவாய்ப்பு வசதிகள்
இக்கல்வி நிறுவனத்தில் பி.டெக்., எம்.டெக்., மற்றும் எம்.எஸ்சி., இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வளாகத்தேர்வில் கலந்து கொள்வது பற்றிய பயிற்சி அளிக்கப்படுகிறது. நாட்டின் முன்னணி நிறுவனங்கள் வளாகத்தேர்வில் கலந்து கொண்டு தகுதியான மாணவர்களை தேர்வு செய்கிறது. அதிகபட்ச சம்பளமாக (2005 2009) கல்வி ஆண்டில் படித்த பி.டெக்., மாணவர்கள் வருடத்துக்கு 7.2 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் வளாகத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us