மாளவியா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஜெய்ப்பூர்

எழுத்தின் அளவு :

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ளது மாளவியா என்.ஐ.டி.,. இந்தியாவில் ஆரம்ப காலத்தில் துவக்கப்பட்ட என்.ஐ.டி.,களுள் இதுவும் ஒன்று. 1963ம் ஆண்டு மாளவியா இன்ஜினியரிங் கல்லூரி என்ற பெயரில் 30 மாணவர்களுடன் துவக்கப்பட்டது.

அப்போது எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் 2 பாடப்பிரிவுகள் மட்டுமே இருந்தது. தற்போது இருக்கும் வளாகத்துக்கு இக்கல்வி நிறுவனம் 1965ம் ஆண்டு மாற்றப்பட்டது. தற்போது 312 ஏக்கர் பரப்பளவில் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் திகழ்கிறது. 2002ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி இதற்கு நிகர்நிலை பல்கலைக்கழகம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது.

மாநிலத்தில் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப துறையில் மாணவர்களை முன்னேற்றும் நோக்கத்தோடு இக்கல்வி நிறுவனம் துவக்கப்பட்டது. பாடப்புத்தங்களுடன், நவீன தொழில்நுட்ப பாடங்களையும் மாணவர்களுக்கு கற்று கொடுக்கிறது.

நூலகம், கம்ப்யூட்டர் ஆய்வகம், கம்யூனிட்டி ஹால், தங்கும் விடுதிகள், மருத்துவமனை, போஸ்ட் ஆபிஸ், பேங்க், விளையாட்டு பொருட்கள், கேன்டீன் போன்ற வசதிகள் உள்ளன. இட ஒதுக்கீடு இக்கல்வி நிறுவனத்தில் ராஜஸ்தான் மாநில மாணவர்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 50 சதவீத இடங்கள் நாட்டின் பிற மாநில மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இளநிலை படிப்புகளுக்கு தேசிய அளவில் நடைபெறும் ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத்தேர்வு அடிப்படையிலும், முதுகலை படிப்புகளுக்கு கேட் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

பாடப்பிரிவுகள்
இளநிலை படிப்புகள் (4 வருடம்)
பி.டெக்., (ஆர்க்கிடெக்சர்)
பி.டெக்., (கெமிக்கல் இன்ஜினியரிங்)
பி.டெக்., (கெமிஸ்ட்ரி)
பி.டெக்., (சிவில் இன்ஜினியரிங்)
பி.டெக்., (கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்)
பி.டெக்., (எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்)
பி.டெக்., (எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன்)
பி.டெக்., (ஹியுமனிட்டிஸ்)
பி.டெக்., (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்)
பி.டெக்., (ஸ்ட்ரக்சரல் இன்ஜினியரிங்)

முதுகலை படிப்புகள் (2வருடம்)
எம்.டெக்., (பவர் சிஸ்டம்)
எம்.டெக்., (எனர்ஜி இன்ஜினியரிங்)
எம்.டெக்., (கெமிக்கல் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (கெமிஸ்ட்ரி)
எம்.டெக்., (சிவில் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன்)
எம்.டெக்., (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (ஸ்ட்ரக்சரல் இன்ஜினியரிங்)
எம்.எஸ்சி., (வேதியியல்)
எம்.எஸ்சி., (இயற்பியல்)
எம்.எஸ்சி., (கணிதம்)
எம்.பி.ஏ.,  இரண்டு வருடம்
எம்.சி.ஏ., மூன்று வருடம்
பிஎச்.டி., படிப்புகளும் இக்கல்வி நிறுவனத்தில் உள்ளன.

வேலை வாய்ப்புகள்
ஜெய்ப்பூர் என்.ஐ.டி.,யில் படிக்கும் மாணவர்களுக்கு வளாகத்தேர்வில் கலந்து கொள்வது பற்றிய பயிற்சி சிறந்த முறையில் அளிக்கப்படுகிறது. இதற்கென தனியாக குழு அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

ஆண்டுதோறும் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் பலவும் இக்கல்வி நிறுவனத்தில் நடைபெறும் வளாகத்தேர்வில் கலந்து கொண்டு, தகுதியான
மாணவர்களை தேர்வு செய்கின்றன.

2000ம் ஆண்டில் 170 பேரும், 2001ல் 235 பேரும், 2002ல் 150 பேரும், 2003ல் 195 பேரும், 2004ல் 278 பேரும், 2005ல் 371 பேரும், 2006ல் 389 பேரும் 2007ல் 340 பேரும் 2008ல் 355 பேரும் வளாகத்தேர்வில் தேர்வாகியுள்ளனர்.

மேலும் விபரங்களுக்கு www.mnit.ac.in என்ற வெப்சைட்டை பார்க்கவும்.

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us