இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஹைதராபாத்

எழுத்தின் அளவு :

ஐ.ஐ.டி., ஹைதராபாத் 2008 ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி  தொடங்கப்பட்டது. தொடக்க ஆண்டில் சிஎஸ்இ., எம்.இ., மற்றும் எல்க்ட்ரிக்கல் இன்ஜினியரிங் என மூன்று படப்பிரிவிகள் தொடங்கப்பட்டு அதில் பி.டெக்.,பிரிவில் 111 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 2009ஆண்டில் பிஎச்.டி., படிப்பில் 11 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.  ஹைதராபாத் ஐ.ஐ.டி.,க்கு தனி கட்டிடம் அமைக்க 2009 ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி சோனியா காந்தி அடிக்கல் நாட்டினர். 2009-10, கல்வி ஆண்டில் இளநிலையில் 120மாணவர்களும், முதுநிலையில் 35 மாணவர்களும், பிஎச்.டி.,ல் 15 மாணவர்களும் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் சர்வதேச அளவில் உதவித்தொகை பெறுகின்றனர். தொடக்க ஆண்டில் இந்நிறுவன ஆசிரியர் பணியிடங்களுக்கு 1700 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதிலிருந்து கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் தரமான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு
நியமிக்கப்படுகின்றனர். 

இளநிலை பட்டப்படிப்புகள் (பி.டெக்.,):
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

முதுநிலை பட்டப்படிப்புகள் (எம்.டெக்.,)
கெமிக்கல் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

பிஎச்.டி.,
கெமிக்கல் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
வேதியியல்
இயற்பியல்
லிபரல் ஆர்ட்ஸ்

தொடர்பு கொள்ள:
அர்ட்னான்ஸ் பேக்டரி எஸ்டேட்
எடுமைலரம்
ஆந்திரா - 502205
தொலைபேசி: 040 2301 6033
பேக்ஸ்: 040 2301 6033
இ-மெயில்: info@iith.ac.in
வெப்சைட்: www.iith.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us