இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மும்பை

எழுத்தின் அளவு :

மும்பை நகரின் வடக்கே பொவாய் என்ற பகுதியில்1958ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (மும்பை), தற்போது நாட்டிலுள்ள சிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. விஹார் மற்றும் பொவாய் ஏரிகள், பசுமையான மலை குன்றுகள் என கண் கவர் இயற்கை சூழலில் 200 ஹெக்டர் பரப்பளவில் இந்த கல்வி வளாகம் அமைந்துள்ளது.

நவீன சமுதாயத்திற்கு ஏற்ற சமூக-பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான அறிவுத்திறனை விரிவுபடுத்தும் நோக்கில் முன்னாள் சோவியத் யூனியன்(யு.எஸ்.எஸ்.ஆர்.,) பங்களிப்புடன், யுனெஸ்கோவுடன் இணைந்து இக்கல்வி நிறுவனம் துவக்கப்பட்டது.

தற்போது சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க இடத்தை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் மிக வேகமான வளர்ச்சியை இக்கல்வி நிறுவனம் பெற்றுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் நவீன கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் வளர்ச்சியில் மாற்றத்தை கொண்டுவரும் வகையிலான திட்டங்களையும், அதேசமயம் உலக நாடுகளின் போக்கிற்கு ஈடுகொடுக்கும் வகையிலும் தொழில்நுட்ப கல்வியில் தீவிரமாக செயல்படும் கல்விநிறுவனங்களில் ஐ.ஐ.டி., (பம்பாய்) ஒன்று.


இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்.,):
ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங்
கெமிக்கல் இன்ஜினியரிங்
வேதியியல்
சிவில் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
எர்த் சயின்சஸ்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங்
எனர்ஜி சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
ஹூயுமானிட்டிஸ் மற்றும் சோசியல் சயின்சஸ்
இன்டஸ்டிரியல் டிசைன்
கணிதம்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
மெட்டலார்ஜிக்கல் மற்றும் மெட்டீரியல்ஸ் சயின்ஸ்
இயற்பியல்

பி.டெக்.,  (டியூயல் டிகிரி):
இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் இணைந்த 5 ஆண்டு டியூயல் டிகிரி படிப்பு பல்வேறு துறைகளிலும் வழங்கப்படுகிறது. இந்த படிப்பை முடிப்பவர்களுக்கு இரண்டு பட்டங்கள் வழங்கப்படும்.

உதாரணமாக,  5 ஆண்டுகள் படித்த பிறகு பி.டெக்., (மெக்கானிக்கல்  இன்ஜினியரிங்), எம்.டெக்., (தெர்மல் மற்றும் புளூயிட்ஸ் இன்ஜினியரிங்) ஆகிய இரண்டு பட்டங்களை (டியூயல் டிகிரி) பெற முடியும்.

டியூயல் டிகிரி படிப்புகள்:
ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங்
கெமிக்கல் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
மெட்டலார்ஜிக்கல் இன்ஜினியரிங் மற்றும் மெட்டீரியல்ஸ் சயின்ஸ்
இயற்பியல்

கட்டண விபரம்:
ஒருமுறை செலுத்த வேண்டிய தொகை: ரூ.1,525
செமஸ்டர் கட்டணம்: ரூ.17,950
திரும்ப பெறக்கூடிய வைப்புத் தொகை: ரூ.3,000
மெடிக்கல் இன்சூரன்ஸ் கட்டணம்: ரூ.126
மொத்த கட்டணம்: ரூ.22,601


தொடர்புகொள்ள:
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பம்பாய்
பொவாய், மும்பை 400 076

தொலைபேசி: +91 22 2572 2545
பேக்ஸ்: :+91 022 2576 4041

வெப்சைட்: www.iitb.ac.in

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us