இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் உத்தர்காண்ட்

எழுத்தின் அளவு :

உத்தர்காண்ட் மாநிலத்தின் காஷிப்பூர் மாவட்டத்தில் புதிய இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் 2011ல் துவக்கப்பட்டது.

இந்தியாவில் புதிதாக 7 ஐ.ஐ.எம். துவங்க மனிதவள மேம்பாட்டுத் துறை முடிவெடுத்து அறிவித்தது. அதன்படி கடைசியாக நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு துவக்கப்பட உள்ளதுதான் காஷிப்பூர் ஐ.ஐ.எம். ஆகும்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் தொழிற்துறை அதிகம் வளரும் மாவட்டமாக உள்ளது காஷிப்பூர். இதனை மேலும் வளர்ச்சி அடையச் செய்யும் வகையில் புதிய ஐ.ஐ.எம். இங்கு துவக்கப்பட உள்ளது.

எஸ்கார்ட் பண்ணை பகுதியில் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பு, புதிய ஐ.ஐ.எம்.மிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய ஐ.ஐ.எம். தற்காலிகமாக கன்னா சன்ஸ்தா, பஸ்புர் சாலையில் இயங்கும். புதிய ஐ.ஐ.எம்.,  ஐ.ஐ.எம். லக்னோவின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும்.

இந்த கல்வி ஆண்டில் சேரவிருக்கும் 60 மாணவர்களுக்கான விண்ணப்பங்களும் ஐ.ஐ.எம். லக்னோ வளாகத்தில் கிடைக்கும். பாட வகுப்புகள் ஜுலை 1, 2011 முதல் நடைபெற உள்ளது.

புதிய வளாகம் கட்டுவதற்கான அடிக்கல்லை மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் கடந்த ஏப்ரல் 29ம் தேதி நாட்டினார். விரைவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு, ஐ.ஐ.எம். காஷிப்பூர் இந்த இடத்தில் இயங்க ஆரம்பிக்கும்.

பாடப்பிரிவு : போஸ்ட் கிராஜுவேட் புரோகிராம் இன் மேனேஜ்மென்ட்

சேர்க்கை முறை :  கேட் தேர்வில் எடுக்கும் மதிப்பெண், நேர்முகத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணைப் பொருத்து மாணவ சேர்க்கை நடைபெறும்.

தற்காலிக முகவரி 
அட்மிஷன்  ஆபீஸ்
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் லக்னோ 
ப்ரபந்த  நகர், ஆப் சிதபூர் ரோடு,
லக்னோ - 226013

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us