இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் - திருச்சி

எழுத்தின் அளவு :

திருச்சியில் புதிதாக துவங்க உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் 60 மாணவர்களுடன் வரும் ஜுன் மாதம் 15ஆம் தேதி திறக்கப்படுகிறது.

திருச்சி ஐ.ஐ.எம்.மின் இயக்குநரான டாக்டர் பிரபுல்லா அக்னிஹோத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது 27 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 12 பேராசிரியர்களுடன் திருச்சி ஐ.ஐ.எம். இயங்க உள்ளது. இன்னும் 33 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இருபாலரும் பயிலும் வகையில் மொத்தம் 60 மாணவர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

பாடப்பிரிவுகள் : முதுநிலை பட்டயப்படிப்புகள்
பினான்ஸியல் அன்ட் அக்கவுன்டிங், மார்க்கெட்டிங், ஸ்ட்ராடெஜிக் மேனேஜ்மென்ட், ஆபரேஷன் அன்ட் குவாலிடேட்டிவ் அனலைசிஸ், எச்.ஆர். அன்ட் ஆர்கனிசேஷனல் பிஹேவியர், மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம் ஆகிய பிரிவுகளில் வழங்கப்பட உள்ளது.

கல்விக் கட்டணம் : இரண்டாண்டுகள் கொண்ட இந்த பட்டயப்படிப்பை படித்து முடிக்க ரூ.20 லட்சம் செலவாகும். இதில், கல்விக் கட்டணம், புத்தகம், தேவையான பொருட்கள் போன்றவை அனைத்தும் அடங்கும்.

தற்போதைக்கு இந்த புதிய ஐஐஎம்-திருச்சி என்.ஐ.டி.யில் இயங்க உள்ளது.

விரைவில் டாப் 10 மேலாண்மை கல்வி நிலையங்களில் ஒன்றாக திருச்சி ஐ.ஐ.எம்.ஐ கொண்டு வர உறுதி ஏற்றுள்ளோம் என்று தலைவர் அக்னிஹோத்ரி தெரிவித்தார்.

முதல் கல்வி ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us