இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கோழிக்கோடு

எழுத்தின் அளவு :

1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.ஐ.எம்., கோழிக்கோடு இந்தியாவின் ஐந்தாவது ஐ.ஐ.எம்., ஆகும். மத்திய அரசு மற்றும் கேரளா அரசின் கூட்டு முயற்சியால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. 1997ல் முதல் முறையாக 42 மாணவர்களுடன் கோழிக்கோட்டின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியை தற்காலிக வளாகமாக கொண்டு செயல்பட தொடங்கியது. தற்போதைய நிரந்தர வளாகம் 2003ம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி அப்துல் கலாமால் திறந்து வைக்கப்பட்டது. 97 ஏக்கர் பரப்பளவில் பசுமையான சூழலில் குன்றின் மேல் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. வகுப்பறை, ஆய்வுகூடம், இன்டர்நெட், கலை அரங்கம், விளையாட்டு மைதானம் என அணைத்து வசதிகளும் ஐ.ஐ.எம்., கோழிக்கோடு ல் உள்ளது.

ஐ.ஐ.எம்., கோழிக்கோட்டின் நூலகம் தானியங்கி நவீன நூலகமாகும். மேலாண்மை படிப்புக்கு தேவையான அனைத்து தகவல்களும் புத்தகம், ஆடியோ, வீடியோ, சி.டி.,மற்றும்  பிற எலக்ட்ரானிக் ஆவணங்களாக கிடைக்கும்.

வழங்கப்படும் படிப்புகள்:
போஸ்ட் கிராஜுவேட் புரோகிராம் இன் மேனேஜ்மென்ட்
மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் புரோகிராம்
பெல்லோ புரோகிராம் இன் மேனேஜ்மென்ட்
பேக்கல்டி டெவலப்மென்ட் புரோகிராம்
எக்சிக்கியூட்டிவ் மேனேஜ்மென்ட் எஜுகேஷன் புரோகிராம்

தொடர்பு கொள்ள:
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கோழிக்கோடு
ஐ.ஐ.எம்.கே., கேம்பஸ் ,
கோழிகோடு. 673 570கேரளா
போன்: 91 495 280 3001
பேக்ஸ்: 91 495 280 3010
இமெயில்: director@iimk.ac.in
வெப்சைட்: www.iimk.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us