முதல்பக்கம் » பாடப்பிரிவுகள்

   
 • - சிவில் இன்ஜினீயரிங் (CE)
 • - எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ரானிக்ஸ் துறை
 • - பி.டெக்., பாலிமர் இன்ஜினீயரிங் (PL)
 • - மெக்கட்ரானிக்ஸ்
 • - ஜியோ இன்பர்மேடிக்ஸ் (GI)
 • - பி.டெக்., பெட்ரோலியம் இன்ஜினியரிங் (PE)
 • - பி.டெக்., எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்
 • - பி.டெக்., பயர் இன்ஜினியரிங்
 • - ஆடியோ இன்ஜினியரிங்
 • உலகில் இசையை விரும்பாதவர் வெகு சிலரே. ஒலியைப் பதிவு செய்யும் முயற்சிகள் 9ம் நூற்றாண்டு முதலே மேற்கொள்ளப்பட்ட போதிலும் தாமஸ் ஆல்வா எடிசன் 1877ல் கண்டு பிடித்த போனோகிராப் என்ற கருவியே முதல் ஒலிப்பதிவு இயந்திரமாக அங்கீகரிக்கப்பட்டது. அன்று முதல் வளர்ச்சியுறத் தொடங்கி இன்று உலகெங்குமுள்ள ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இது தவிர்க்க முடியாத அங்கமாகவே மாறிவிட்டது.

  இசையையும் துறையில் பணி புரிய விரும்பிடும் நபர்களுக்கான துறை தான் ஆடியோ இன்ஜினியரிங். இது ஒலி அறிவியல் துறையின் ஒரு பிரிவாக உள்ளது. ஒலியைப் பதிவு செய்வது, நகல்களை, உருவாக்குவது, எடிட்டிங், கலப்பது, மறுபடியும் ஒலிக்கச் செய்வது மற்றும் இதற்கான உபகரணங்கள் தொடர்புடைய துறையே ஆடியோ இன்ஜினியரிங் ஆகும். இத் துறையில் தயாரிப்பு மற்றும் தயாரிப்புக்கு பிந்தைய பணிகள் இருக்கும். தயாரிப்பில் ஒலியமைப்பு செய்வதிலிருந்து ஒலிப்பதிவு செய்வது வரையிலான அனைத்து வேலைகளும் இருக்கும். மிகவும் சன்னமான ஒலிஅதிர்வுகளையும் துல்லியமாகப் பதிவு செய்வதற்காக ஆடியோ இன்ஜினியர்கள் பல்வேறு கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள்.

  பதிவு செய்யும் நிலையில் எலக்ட்ரானிக் மிக்சிங் போர்ட் (கன்ஸோல் போர்ட்) என்ற கருவியே பிரதானமாகத் திகழ்கிறது. இதிலுள்ள பல்வேறு சுவிட்சுகள், டயல், லைட்கள், மீட்டர்களின் உதவியுடனேயே உள்ளே வரும் ஒலியளவைக் கண்டறிந்து தேவைக்கேற்ப அவற்றை மாற்றியமைக்கிறார்கள். ஒலிப்பதிவுக்குப் பிந்தைய நிலையில் (போஸ்ட் புரடக்சன்) பதிவு செய்யப்பட்ட ஒலியதிர்வுகள் தேவையான ஒலி அலைகளாக மார்பிங் செய்யப்படுகின்றன.

  இன்றைய நவீன உலகில் ஆடியோ இன்ஜினியரிங் துறை நம்பிக்கை தரும் பணி வாய்ப்புகளை வழங்கி வருகிறது. திரைப்படம், வீடியோ தயாரிப்பு, ஒலிபரப்பு, விளம்பரம் ஆகிய பிரிவுகளில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இத் துறையினருக்க நல்ல வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இத் துறையில் இணைந்திட துறை மீதான ஆழமான ஈடுபாடும் விருப்பமும் கட்டாயம் தேவை.
  என்ன தேவை ஒலியைப் பதிவு செய்து சீரமைத்து வெளியிட பல்வேறு கருவிகள் மற்றும் டிஜிட்டல் கருவிகளை உபயோகிக்க வேண்டும். ஆடியோகிராபி மற்றும் ஒலிப்பதவி பிரிவில் ஏதாவது ஒரு படிப்பைப் படித்தவர்கள் ஆடீயோ இன்ஜினியர்களாக உருவாகலாம். திரைப்படங்களிலோ தொலைக்காட்சியிலோ வானொலியிலோ கேட்கும் இறுதி வடிவங்களிலான வீடியோ, பாடல்கள், பின்னணி இசை, விளம்பரம் போன்றவற்றிற்கு இவர்களே பொறுப்பானவர்கள். நிகழ்வுகள் குறித்து எப்படி ஒரு பத்திரிகையாளருக்கு மூக்கில் வியர்ப்பது போலவே ஆடியோ இன்ஜினியருக்கும் மிக நல்ல காதுகள் தேவை. ஆடியோ இன்ஜினியர்கள் ரெகார்டிங் இன்ஜினியர், சவுண்ட் இன்ஜினியர் என அழைக்கப்படுகின்றனர்.

  தகுதிகள்
  ஆடியோகிராபி, சவுண்ட் இன்ஜினியரிங், சவுண்ட் ரிகார்டிங் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ அல்லது பட்டம் படித்தவர்கள் ஆடியோ இன்ஜினியர்களாக மாறலாம். பொதுவாக இத் துறைக்கென்று குறிப்பிட்ட கல்வித் தகுதிகள் தேவையில்லை. இத் துறையில் சிறப்புத் திறன்களைப் பெற இயற்பியல் மற்றும் கணிதத்தில் அடிப்படையறிவு பெற்றிருப்பது கட்டாயம் தேவைப்படுகிறது. ஒலிப்பதிவு செய்யப்படும் அறையின் அதிர்வு, ஒலியின் தாமத நேரம் போன்ற நுட்பமான அம்சங்களில் பல்வேறு கணக்கீடுகள் தேவைப்படும். எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் அல்லது பைன் ஆர்ட்ஸ் துறைகளில் பயின்றவர்கள் இத் துறையில் இணைவது உபயோகமாகயிருக்கும். மிக்சிங் கன்ஸோல், மைக்ரோபோன், சிக்னல் பிராசசர், டேப் இயந்திரங்கள், டிஜிட்டல் ஆடீயோ ஒர்க் ஸ்டேஷன், மியூசிக் சீக்வன்ஸர், ஸ்பீக்கர், பிரீ ஆம்ப்ளிபையர் போன்றவற்றை பயன்படுத்துவதில் ஆடியோ இன்ஜினியர்கள் திறன் பெற்றிருக்க வேண்டும்.

  படிப்புகள் எவை
  இத்துறையில் சவுண்ட் ரெகார்டிங், எடிட்டிங், மிக்சிங் போன்ற படிப்புகள் உள்ளன. இவை தவிர சிறப்புப் படிப்புகளாக ஆடியோ ஒயரிங், அட்வான்ஸ்ட் கம்யூனிகேஷன் ஸ்கில், மிடி, எலக்ட்ரானிக் மியூசிக், சவுண்ட் ரெகார்டிங், மியூசிக் பிசினஸ், மல்டி டிராக் புரடக்ஷன் டெக்னிக் போன்ற பிற படிப்புகளும் உள்ளன. இப் படிப்புகளில் ஒலிப்பதிவுடன் சேர்த்து டப்பிங் உள்ளிட்ட பிற திறமைகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன.

  துறையின் எதிர்காலம்
  திரைப்படத் துறை, தொலைக்காட்சி, விளம்பரம், ஒலிபரப்பு, நேரடி இசைக் கச்சேரிகள், மல்டி மீடியா நிறுவனங்கள், ‘சிடி’., உற்பத்தி, பள்ளிகள் போன்றவற்றில் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. இசைத் துறையில் மிக நல்ல பணி வாய்ப்புகள் பல நிலைகளில் கிடைக்கும். ரெகார்டிங் ஸ்டூடியோக்களில் பணி புரியவும் சுயமாக நடத்தவும் வாய்ப்புகள் உள்ளன.
  மிகச் சிறப்பான சம்பளத்தையும் நல்ல புகழையும் பெற்றுத் தரும் துறையாக இருப்பதால் ஆடியோ இன்ஜினியரிங் இத் துறையில் ஆர்வத்தைக் கொண்டிருப்பவருக்கான நல்ல தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
 • - பி.டெக்., கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினீயரிங் (CS)
 • - கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினீயரிங் (CS) (ss)
 • - எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் (EY)
 • - எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (ES) (sandwich) (SS)
 • - எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினீயரிங் (EM) (SS)
 • - எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினீயரிங் (EI)
 • - என்விரான்மென்டல் இன்ஜினீயரிங் (EN)
 • - பி.டெக்., இண்டஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி (IB)
 • - பி.டெக்., இண்டஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி (IS) (SS)
 • - இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங் (IE)
 • - இன்பர்மேஷன் டெக்னாலஜி (IT)
1 of 4 Pages
« First « Previous 1 2 3 4
Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us