எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படிப்பு, மின் ஆற்றலை தேவைக்கு தகுந்தவாறு உரிய இடத்திற்கு செலுத்துவது மற்றும் உபயோகப்படுத்துவதை கற்றுத்தரும் படிப்பாகும்.
மாணவர்கள் இந்த படிப்பின் மூலம் மின் ஆற்றலை உருவாக்குதல், கடத்துதல், சர்க்யூட், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் போன்ற துறைகளை பயிலலாம்.
இத்துறையை கற்க விரும்புபவர்கள் எலக்ட்ரானிக் கருவிகள், சர்க்யூட் அளவுகோல் பற்றிய போதிய அறிவும், இன்ஸ்ட்ருமென்டேஷன், எலக்ட்ரானிக் சாதனங்களை கையாளுதல், பாதுகாத்தல் போன்றவைகளை அறிந்திருப்பது அவசியமான ஒன்றாகும். மேலும் கம்ப்யூட்டர் உதவியுடன் எலக்ட்ரிகல் தொடர்பான அணுகுமுறைகளையும், ஆராய்ச்சிகளையும் செய்ய தெரிந்திருந்தால் கூடுதல் சிறப்பாகும்.
எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் துறையில் மின் ஆற்றல், மின் அணுவியல், மின் காந்தவியல் போன்றவை பற்றி படிக்கலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்த துறை பெரும் வளர்ச்சி கண்டது. இத்துறையின் உதவியுடன் எலக்ட்ரிக் தந்திமுறை, சிக்னல் பிராசசிங், டெலி கம்யூனிகேஷன் போன்ற வியாபார ரீதியான தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.
17 ம் நூற்றாண்டில் துவக்கத்தில் மின் ஆற்றல் தொடர்பான ஆய்வுகள் துவங்கப்பட்டன. வில்லியம் கில்பர்ட் என்பவர் முதல் எலக்ட்ரிகல் இன்ஜினியர் ஆவார். இவர் வெர்சோரியம் என்னும் எலக்ட்ரிகல் சாதனத்தை கண்டுபிடித்தார். இந்த சாதனத்தின் மூலம் நிலையான, சமதளத்தில் உள்ள ஆற்றல் கொண்ட பொருளை அறியலாம். 1827 ஆம் ஆண்டு ஜார்ஜ் ஓம் என்பவர் மின் ஊடு கடத்தி (Conductor)யில் மின்னோட்டம் தொடர்பான ஆய்வு மேற்கொண்டார். 1882 ஆம் ஆண்டு தாமஸ் ஆல்வா எடிசன் உலகின் முதல் நீளமான எலக்ட்ரிகல் நெட்வொர்க் மூலம் 110 வோல்ட் மின்சாரத்தை கிடைக்க செய்தார். இவ்வாறாக எலக்ட்ரிகல் துறை வளர்ச்சி கண்டது. பிரிவுகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகங்களில் நான்கு அல்லது ஐந்து வருட பட்டப்படிப்பாக இந்த துறை இயங்குகிறது.
* இளநிலை இன்ஜினியரிங் * இளநிலை அறிவியல் * இளநிலை டெக்னாலஜி * இளநிலை அப்ளைடு சயின்ஸ் * முதுகலை இன்ஜினியரிங் * இன்ஜினியரிங் மேனேஜ்மென்ட் * பிஎச்.டி.,இன்ஜினியரிங் என பல்வேறு பாடபிரிவுகளில் இந்த எலக்ட்ரிகல் துறை பல்கலைகழகங்களால் அங்கீகரிக்கப்படுகிறது.
துணை பிரிவுகள்: எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் துறை சில துணை பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. கீழ்கண்ட துறைகளை எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் மாணவர்கள் அதிக அளவில் துணை பிரிவுகளாக தேர்ந்தெடுத்து பயில்கின்றனர். இந்த பிரிவுகளில் எலக்ட்ரிகல் பயன்பாடு அதிகம் தேவைப்படுகிறது.
* பவர் இன்ஜினியரிங் * கன்ட்ரோல் இன்ஜினியரிங் * எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் * மைக்ரோ இன்ஜினியரிங் * இன்ஸ்ட்ருமென்டேஷன் * கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்
பயிலும் நிறுவனங்கள் - பட்டப்படிப்புகள் * இந்தியன் இன்ஸ்டிடியூட்ஸ் ஆப் டெக்னாலஜி (www.iitm.ac.in ) * டில்லி டெக்னாலஜிகல் பல்கலைகழகம் (http://dce.edu) * நேஷனல் இன்ஸ்டிடியூட்ஸ் ஆப் டெக்னாலஜி (http://nitdgp.ac.in)
நுழைவுத்தேர்வு இதில் சேர்வதற்கு ஜே.இ.இ., (Joint Entrance EXamination) என்னும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மேலும் இந்த துறையில் பயிலும் மாணவர்கள் பள்ளியில் கணிதம் அல்லதுஅறிவியலை ஏதேனும் ஒரு பாடபிரிவாக படித்திருக்க வேண்டும்
பிஎச்.டி., / எம்.எஸ் படிப்புகள்: இதில் சேர்வதற்கு இரண்டு வகையான தேர்வுகள் நடக்கும். முதலாவதாக எழுத்து தேர்வும், இரண்டாவதாக நேர்முகத்தேர்வும் நடக்கும். வேலைவாய்ப்பு எலக்ட்ரிகல் துறையில் நன்கு தேர்ந்தவர்கள் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ், நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன், ரிலையன்ஸ் பவர் போன்ற உயர் நிறுவனங்களிலும், ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற நிறுவனங்களில் பயிற்சியாளராகவும் பணிபுரியலாம்.
விண்ணப்பங்கள் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் 2010 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் தரப்படுகின்றன. ஆன்லைனில் விண்ணப்பிக்க: டிசம்பர் 07, 2009 (இன்று) கடைசி நாள் ஆப்லைனில் விண்ணப்பிக்க: டிசம்பர் 15 , 2009 கடைசி நாள் தேர்வு நாள்: ஏப்ரல் 11 , 2010. மேலும் விபரங்களுக்கு:http://jee.iitd.ac.in/esa.htm என்ற இணையதளத்தில் பெறலாம்.